தொல்லியல் துறை தடையால் பாதாள சாக்கடை இணைப்பு கொடுக்க முடியாத நிலை வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரால் மாசடையும் குளம்


தொல்லியல் துறை தடையால் பாதாள சாக்கடை இணைப்பு கொடுக்க முடியாத நிலை வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரால் மாசடையும் குளம்
x
தினத்தந்தி 5 July 2021 5:01 AM GMT (Updated: 5 July 2021 5:01 AM GMT)

தொல்லியல் துறை தடையால் பாதாள சாக்கடை இணைப்பு கொடுக்க முடியாத நிலை வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரால் மாசடையும் குளம் எம்.எல்.ஏ. ஆய்வு.

மாமல்லபுரம்,

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் ஒத்தவாடை தெருவில் கடற்கரை கோவிலுக்கு அருகில் பழமை வாய்ந்த கொரநாட்டு குளம் உள்ளது. 15 ஆண்டுகளுக்கு முன்னர் மாமல்லபுரம் வரும் வெளிநாட்டு, உள்நாட்டு பயணிகள் இந்த குளத்தில் குளித்து மகிழ்ந்ததுண்டு. தற்போது இந்த பகுதியில் உள்ள ஒரு சில இடங்களில் கட்டுமான பணிகள், பாதாள சாக்கடை இணைப்பு என தொல்லியல் துறையால் தடை செய்யப்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் கலந்து இந்த குளம் துர்நாற்றம் வீசுகிறது.

இதனால் இந்த குளத்தை சுற்றி வசிக்கும் மக்கள் அவதிக்குள்ளாகின்றனர். இது குறித்து தகவல் அறிந்து மாமல்லபுரம் வந்த திருப்போரூர் எம்.எல்.ஏ. எஸ்.எஸ்.பாலாஜி கொரநாட்டு குளத்தை சுற்றி பார்த்து அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார்.

அப்போது அங்கு வசிக்கும் மக்களிடம் பேசிய அவர், உள்ளாட்சி துறை அமைச்சரிடம் பேசி மாமல்லபுரம் பேரூராட்சி சார்பில் இந்த குளத்தை தூர் வாரி சீரமைத்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர ஆவன செய்வதாக உறுதி அளித்தார். மேலும் தொல்லியல் துறை தடையால் சில இடங்களில் உள்ள வீடுகளில் கொடுக்க முடியாமல் உள்ள பாதாள சாக்கடை இணைப்புகள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பேசி தடையை நீக்கி குடியிருப்புவாசிகளுக்கு பாதாள சாக்கடை இணைப்புகள் அத்துறையின் தடை ஆணையை நீக்கி வழங்க ஆவன செய்வதாகவும் அவர் உறுதி அளித்தார். அவருடன் மாமல்லபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன், பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் ரகுபதி, பேரூராட்சி துப்புரவு மேற்பார்வையாளர் தாமோதரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் அன்பு, சாலமன், அய்யப்பன், சிவா மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.


Next Story