மாவட்ட செய்திகள்

கோவில்களில் சிறப்பு வழிபாடு + "||" + Special worship in temples

கோவில்களில் சிறப்பு வழிபாடு

கோவில்களில் சிறப்பு வழிபாடு
திண்டுக்கல் மாவட்டத்தில் ஆடி பிரதோஷத்தையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
பழனி: 

ஆடி மாத பிரதோஷத்தை முன்னிட்டு பழனி முருகன் கோவிலில் உள்ள கைலாசநாதர் சன்னதி, பெரியநாயகி அம்மன் கோவில், பெரியாவுடையார் கோவில் உள்ளிட்ட கோவில்களில் சாமிக்கு பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தன. பெரியாவுடையார் கோவிலில் உற்சவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு உட்பிரகாரம் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


இதேபோல் பழனி பட்டத்து விநாயகர் கோவிலில் உள்ள சிவன் சன்னதியில் சாமிக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. முன்னதாக பால், பழம், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான பொருட்களால் சிவபெருமானுக்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரமும் செய்யப்பட்டது. நத்தம் கோவில்பட்டியில் உள்ள கைலாசநாதர் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

தொடர்புடைய செய்திகள்

1. அரியலூர் மாவட்டத்தில் தைப்பூச விழாவையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு; பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து வந்தனர்
அரியலூர் மாவட்டத்தில் தைப்பூச விழாவையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து வந்தனர்.
2. பெரம்பலூா் மாவட்டத்தில் தைப்பூச திருவிழாவையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
பெரம்பலூா் மாவட்டத்தில் தைப்பூச திருவிழாவையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.