தேனியில் நிலுவை தொகை கேட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒப்பந்ததாரர்கள் போராட்டம்


தேனியில் நிலுவை தொகை கேட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒப்பந்ததாரர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 23 July 2021 11:42 AM IST (Updated: 23 July 2021 11:42 AM IST)
t-max-icont-min-icon

தேனியில் நிலுவை தொகையை கேட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒப்பந்ததாரர்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

தேனி,

தேனி மாவட்டம் உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கடந்த ஆண்டு தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பணிகள் நடைபெற்றன. இந்த பணிகளுக்கு கட்டுமானப் பொருட்கள் வழங்கியதில் ஒப்பந்ததாரர்களுக்கு 1 கோடியே 50 லட்சம் ரூபாய் வரை பணம் நிலுவலையில் உள்ளதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக ஒப்பந்ததாரர்கள் பல முறை மாவட்ட நிர்வாகத்திடம் முறையிட்டும் எந்த பதிலும் இல்லாத காரணத்தால், ஒப்பந்ததாரர்கள் இன்று உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story