2-ம் ஆண்டு என்ஜினீயரிங் படிப்பில் நேரடியாக சேர 10-ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம் தமிழக அரசு தகவல்


2-ம் ஆண்டு என்ஜினீயரிங் படிப்பில் நேரடியாக சேர 10-ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம் தமிழக அரசு தகவல்
x
தினத்தந்தி 6 Aug 2021 2:52 PM GMT (Updated: 6 Aug 2021 2:52 PM GMT)

2-ம் ஆண்டு என்ஜினீயரிங் படிப்பில் நேரடியாக சேர 10-ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம் தமிழக அரசு தகவல்.

சென்னை,

தகுதிவாய்ந்த டிப்ளமோ படிப்பு மற்றும் பி.எஸ்.சி. பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்று முடித்த மாணவர்கள் நேரடி 2-வது ஆண்டு என்ஜினீயரிங் படிப்புகளில் 2021-22-ம் கல்வியாண்டுகளில் அரசு, அரசு உதவிபெறும், அண்ணாமலை பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரிகளில் சேருவதற்கு வருகிற 10-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.tnlea.com, www.accet.co.in, www.accetedu.in என்ற இணையதளங்களுக்கு சென்று விண்ணப்பிக்கலாம். 04565-230801, 224528 என்ற தொலைபேசி எண்களிலும் மேலும் விவரங்களை தெரிந்து கொள்ளலாம். இந்த கல்வியாண்டுக்கான பி.இ., பி.டெக். 2-ம் ஆண்டு பட்டப்படிப்புக்கான கலந்தாய்வு இணையதளம் வாயிலாக நடத்தப்படும்.

அதேபோல், எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்பில் சேருவதற்கான விண்ணப்பப்பதிவு வருகிற 11-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது. விண்ணப்பதாரர்கள் www.gct.ac.in, www.tn-mbamca.com என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களை 0422-2451100 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

இதுதவிர, தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தின் கீழ் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் என்ஜினீயரிங் கல்லூரிகளில் பகுதிநேர பி.இ., பி.டெக் பட்டப்படிப்புகளுக்கு 6-ந்தேதி(இன்று) முதல் அடுத்த மாதம் (செப்டம்பர்) 5-ந்தேதி வரை www.ptbe-tnea.com என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்த மேலும் தகவல்களுக்கு 0422-2574071, 2574072 என்ற எண்களில் கேட்டு தெரிந்துகொள்ளலாம்.

மேற்கண்ட தகவல் தமிழக அரசு சார்பில் வெளியிடப் பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story