பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதுடன் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை வாபஸ் பெற வேண்டும்
பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதுடன் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை வாபஸ் பெற வேண்டும் விஜயகாந்த் கோரிக்கை.
சென்னை,
தே.மு.தி.க. நிறுவன தலைவர், பொதுச்செயலாளர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
வீட்டு உபயோகத்திற்கான சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.25 உயர்த்தப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கால் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வந்த மக்கள் தற்போது தான் அதிலிருந்து மீண்டு வருகின்றனர். இந்த சமயத்தில் பொதுமக்கள் தலையில் மேலும் சுமையை ஏற்படுத்தும் வகையில் சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை மத்திய அரசு உயர்த்திருப்பது வேதனை அளிக்கிறது. சிலிண்டர் விலை அடிக்கடி உயர்த்தப்பட்டு வருவதால் சாமானிய மக்களின் வாழ்வாதாரம் கேள்வி குறியாகி உள்ளது.
அத்தியாவசிய பொருட்களான பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் சிலிண்டர் ஆகியவற்றின் விலையை மத்திய அரசு தொடர்ந்து உயர்த்தி வருவது கடும் கண்டனத்துக்குரியது. பொதுமக்களின் நலன் கருதி சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Related Tags :
Next Story