தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 27 பவுன் நகை கொள்ளை
தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 27 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது.
சாமி தரிசனம் செய்ய...
திருவள்ளூரை அடுத்த வெங்கல் அருகே உள்ள கொமக்கம்பேடு கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 55). தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி பூங்கொடி.நேற்று முன்தினம் வெங்கடேசன் தன்னுடைய மனைவி மற்றும் மகனுடன் வீட்டை பூட்டிவிட்டு காஞ்சீபுரம் மாவட்டம் வல்லக்கோட்டை முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய சென்றார்.
நகை கொள்ளை
பின்னர் வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் ஜன்னல் கம்பியில் கிரில் வளைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது ஜன்னல் வழியாக உள்ளே புகுந்த மர்மநபர் வீட்டில் இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த 27 பவுன் நகையை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
இது குறித்து வெங்கடேசன் வெங்கல் போலீசில் புகார் செய்தார். போலீசார் இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story