டிராக்டர்-மோட்டார் சைக்கிள் மோதல்; வாலிபர் பலி


டிராக்டர்-மோட்டார் சைக்கிள் மோதல்; வாலிபர் பலி
x
தினத்தந்தி 6 Sept 2021 12:42 PM IST (Updated: 6 Sept 2021 12:42 PM IST)
t-max-icont-min-icon

டிராக்டர்-மோட்டார் சைக்கிள் மோதல்; வாலிபர் பலி.

பள்ளிப்பட்டு,

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே முருக்கம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேல் (வயது27). கூலித்தொழிலாளி. இவருக்கு 10 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்தநிலையில் நேற்று மாலை சக்திவேல் தனது மாமனார் பெருமாள் (42), நண்பர் விநாயகம் (30) ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் திருத்தணியில் இருந்து தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். மெயின் ரோட்டிலிருந்து தனது கிராமத்திற்கு செல்லும் சாலையில் அவர் சென்றபோது, எதிரே வேகமாக வந்த டிராக்டர் மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதியது.

இதில், சக்திவேல் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பெருமாள், விநாயகம் ஆகியோர் சிறிய காயத்துடன் உயிர் தப்பினர். இந்த விபத்து குறித்து திருத்தணி போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள டிராக்டர் டிரைவரை வலைவீசி தேடிவருகின்றனர். விபத்தில் இறந்த சக்திவேலின் மனைவி தற்போது 7 மாத கர்ப்பிணியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story