கும்மிடிப்பூண்டியில் செல்போன் கடையில் தீ விபத்து


கும்மிடிப்பூண்டியில் செல்போன் கடையில் தீ விபத்து
x
தினத்தந்தி 16 Sept 2021 5:10 PM IST (Updated: 16 Sept 2021 5:10 PM IST)
t-max-icont-min-icon

கும்மிடிப்பூண்டியில் செல்போன் கடையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி, ரெட்டம்பேடு சாலை தேர்வழி கிராமத்தை சேர்ந்தவர் தீபன் (வயது 25). செல்போன் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் கடையை மூடிவிட்டு தீபன் சாப்பிட சென்றார். அப்போது மின்கசிவு காரணமாக கடைக்குள் திடீரென தீப்பிடித்தது. தகவலறிந்து கும்மிடிப்பூண்டி சிப்காட் தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இருப்பினும், கடையில் இருந்த 30-க்கும் மேற்பட்ட செல்போன்கள் மற்றும் ரூ.10 ஆயிரம் ஆகியவை தீயில் எரிந்து சாம்பலானது. இதுகுறித்து கும்மிடிப்பூண்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story