மாவட்ட செய்திகள்

திருவள்ளூர் அருகே லோடு ஆட்டோ மோதி கட்டிட தொழிலாளி பலி + "||" + Construction worker killed in road accident near Tiruvallur

திருவள்ளூர் அருகே லோடு ஆட்டோ மோதி கட்டிட தொழிலாளி பலி

திருவள்ளூர் அருகே லோடு ஆட்டோ மோதி கட்டிட தொழிலாளி பலி
திருவள்ளூர் அருகே லோடு ஆட்டோ மோதி கட்டிட தொழிலாளி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார்.
திருவள்ளூரை அடுத்த திருப்பாச்சூர் கோட்டை காலனி பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் கலையரசன் (வயது 40). இவர் கட்டிட தொழிலாளி. இந்த நிலையில் இவர், கடந்த 1-ந் தேதியன்று வேலையை முடித்துவிட்டு தனது வீடு நோக்கி திருப்பாச்சூர் சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வேகமாக வந்த லோடு ஆட்டோ ஒன்று எதிர்பாராதவிதமாக அவர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார். 

இந்த சம்பவம் குறித்து அறிந்த திருவள்ளூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இறந்த கலையரசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரது சாவு குறித்து வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரித்து வருகின்றனர்.


தொடர்புடைய செய்திகள்

1. திருவள்ளூர் அருகே பாம்பு கடித்து விவசாயி சாவு
திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் அருகே பாம்பு ஒன்று விவசாயியை கடித்தது. சிகிச்சை பலனில்லாமல் பரிதாபமாக இறந்துபோனார்.
2. திருவள்ளூர் தாசில்தார் அலுவலகத்தில் நலத்திட்ட உதவிகள்
திருவள்ளூர் தாசில்தார் அலுவலகத்தில் திருவள்ளூரில் உள்ள தொழுநோயாளர் மாற்றுத்திறனாளிகள் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
3. ஓடும் காரில் திடீர் தீ விபத்து... குழந்தைகள் உட்பட 9 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்...!
திருவள்ளூர் மாவட்டம் பெருவாயில் பகுதியில் காரில் திடீரென தீப்பற்றி எரிந்ததில் 9 பேர் நூலிழையில் உயிர் தப்பினர்.
4. திருவள்ளூர் அருகே அனுமதியின்றி சாலை மறியலில் ஈடுபட்ட புரட்சி பாரதம் கட்சியினர் 140 பேர் மீது வழக்கு
திருவள்ளூர் அருகே அனுமதியின்றி சாலை மறியலில் ஈடுபட்ட புரட்சி பாரதம் கட்சியினர் 140 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
5. திருவள்ளூர் அருகே வீட்டின் முன்பு தேங்கிய மழை நீரை அகற்றியவருக்கு அடி-உதை
திருவள்ளூர் அருகே வீட்டின் முன்பு தேங்கிய மழை நீரை அகற்றியவருக்கு தகாத வார்த்தைகளால் பேசி அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது.