தேர்தல் செய்திகள்

காங்கிரசின் தேர்தல் அறிக்கை தேர்தல் முடிவுக்கு முன் தமிழக மக்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி; மு.க. ஸ்டாலின் + "||" + Congress election manifesto is a great victory for the Tamil people before election results; MK Stalin

காங்கிரசின் தேர்தல் அறிக்கை தேர்தல் முடிவுக்கு முன் தமிழக மக்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி; மு.க. ஸ்டாலின்

காங்கிரசின் தேர்தல் அறிக்கை தேர்தல் முடிவுக்கு முன் தமிழக மக்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி; மு.க. ஸ்டாலின்
காங்கிரசின் தேர்தல் அறிக்கை தேர்தல் முடிவுக்கு முன் தமிழக மக்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என மு.க. ஸ்டாலின் அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.
சென்னை,

நாடாளுமன்ற தேர்தல் மற்றும் தமிழக சட்டசபை இடைத்தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றன.  தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இடம் பெற்று உள்ளது.  தேர்தலை அடுத்து காங்கிரஸ் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டது.

இந்த தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்காக முன்னாள் மத்திய நிதி மந்திரி ப. சிதம்பரம் தலைமையில் 19 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. பல்வேறு வாழ்க்கை நிலையில் உள்ள மக்களின் கருத்துகளை கேட்டு தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, முன்னாள் தலைவர் சோனியாகாந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் இன்று தேர்தல் அறிக்கையை கட்சியின் தலைமை அலுவலகத்தில் வெளியிட்டனர்.

இந்த தேர்தல் அறிக்கையில் உள்ள முக்கிய அம்சங்களாக, கிராம ஊராட்சிகளில் 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும்.  புதிய தொழில் தொடங்க 3 ஆண்டுகளுக்கு எந்த அனுமதியும் பெறத்தேவையில்லை.  2030 ஆம் ஆண்டிற்குள் வறுமை முற்றிலும் ஒழிக்கப்படும்.

விவசாய கடன்களை திருப்பி செலுத்தாவிட்டால் அது கிரிமினல் குற்றமாக கருத்தப்பட மாட்டாது.  விவசாயத்திற்கு என தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என கூறப்பட்டு உள்ளது.

இதுபற்றி தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையால், நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளிவரும் முன்பே தமிழக மக்களுக்கு மாபெரும் வெற்றி கிடைத்துள்ளது என தெரிவித்து உள்ளார்.

தி.மு.க.வின் வாக்குறுதிகள் அனைத்தும் மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான அரசு அமைந்தவுடன் ஜூன் 3ந்தேதிக்கு பிறகு ஒவ்வொன்றாக செயல்பாட்டிற்கு வரும் என அவர் தெரிவித்து உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. தி.மு.க. ஆட்சியில் இல்லாத 8 வருடங்களில் மக்களுக்காக குரல் கொடுத்து வருகிறோம்; மு.க. ஸ்டாலின் பேச்சு
தி.மு.க. ஆட்சியில் இல்லாத 8 வருடங்களில் மக்களுக்காக குரல் கொடுத்து வருகிறோம் என மு.க. ஸ்டாலின் பேசியுள்ளார்.
2. பா.ஜ.க.வுடன் பேசினேன் என நிரூபித்தால் அரசியலை விட்டு விலக தயார்; மு.க. ஸ்டாலின்
பா.ஜ.க.வுடன் பேசினேன் என நிரூபித்தால் அரசியலை விட்டு விலக தயார் என மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
3. தேர்தல் அறிக்கை தயாரிக்க அரசு எந்திரத்தை தவறாக பயன்படுத்திய பா.ஜனதா - தேர்தல் கமி‌ஷனில் காங்கிரஸ் புகார்
தேர்தல் அறிக்கை தயாரிக்க அரசு எந்திரத்தை தவறாக பயன்படுத்தியதாக, பா.ஜனதா கட்சியின் மீது தேர்தல் கமி‌ஷனில் காங்கிரஸ் புகார் அளித்துள்ளது.
4. அ.தி.மு.க. உள்ளாட்சி தேர்தலை நடத்திடாமல் இருப்பது குடிநீர், சாலை வசதிகள் கிடைக்காததற்கு காரணம்; மு.க. ஸ்டாலின்
அ.தி.மு.க. உள்ளாட்சி தேர்தலை நடத்திடாமல் இருப்பது குடிநீர், சாலை வசதிகள் போன்றவை கிடைக்காததற்கு காரணம் என மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு கூறியுள்ளார்.
5. தி.மு.க.வின் செயல் வீராங்கனையாக இருந்தவர் வசந்தி ஸ்டான்லி; மு.க. ஸ்டாலின்
தி.மு.க.வின் செயல் வீராங்கனையாக இருந்தவர் வசந்தி ஸ்டான்லி என மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.