16 வயது சிறுமி கடத்தி பாலியல் வன்கொடுமை - அதிர்ச்சி சம்பவம்
16 வயது சிறுமி கடத்தி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.
லக்னோ,
உத்தரபிரதேசம் பதேபூர் மாவட்டம் ஜாபர்கஞ்ச் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி நேற்று மாலை இயற்கை உபாதை கழிக்க சென்றார்.
அப்போது அந்த சிறுமியை பின் தொடர்ந்து சென்ற அதேபக்குதியை சேர்ந்த ஷாஹிப் அலி என்ற நபர் சிறுமியை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதனை தொடர்ந்து தன் மகள் கடத்தப்பட்டது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அப்போது சிறுமியை மீட்ட போலீசார் ஷாஹிப் அலியையும் கைது செய்தனர். சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த ஷாஹிப் அலிக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
Related Tags :
Next Story