பா.ஜனதா ஆட்சியில்தான் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை பிரதமருக்கு காங்கிரஸ் கண்டனம்

பா.ஜனதா ஆட்சியில்தான் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை பிரதமருக்கு காங்கிரஸ் கண்டனம்
x
தினத்தந்தி 25 Jun 2017 9:29 PM GMT (Updated: 2017-06-26T02:59:19+05:30)

பிரதமர் மோடி நேற்று வானொலியில் பேசும்போது 1975–ம் ஆண்டு ஜூன் மாதம் 25–ந் தேதி அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி அமல்படுத்திய நெருக்கடி நிலை பிரகடனம் குறித்து நினைவு கூர்ந்தார்.

புதுடெல்லி,

பிரதமர் மோடி நேற்று வானொலியில் பேசும்போது 1975–ம் ஆண்டு ஜூன் மாதம் 25–ந் தேதி அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி அமல்படுத்திய நெருக்கடி நிலை பிரகடனம் குறித்து நினைவு கூர்ந்தார்.

இதற்கு கண்டனம் தெரிவித்த காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் டாம் வடக்கன் கூறியதாவது:–

பிரதமர் அவசர நிலை பிரகடனம் குறித்து நினைவு கூர்ந்து உள்ளார். நாங்களும் அதை நினைவில் கொண்டிருக்கிறோம். நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டது தவறுதான். அதில் இருந்து பாடமும் கற்றுக்கொண்டு உள்ளோம். நெருக்கடி நிலையை எங்களுக்கு நினைவுபடுத்தும் நேரத்தில், உங்களையும் சரி செய்து கொள்ளுங்கள். வரலாற்றில் இருந்து பாடம் கற்றுக்கொள்ளாவிட்டால் அதே வரலாறு உங்களுக்கும் திரும்பும்.

பா.ஜனதா ஆட்சியில் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டு இருப்பது போன்ற நிலை உள்ளது.

பா.ஜனதா அரசில் மந்திரிகள் எல்லாம் பெயரளவுக்குத்தான் உள்ளனர். மந்திரி சபை முடிவெடுப்பது இல்லை. பிரதமர் அலுவலகம்தான் எல்லா முடிவுகளையும் எடுக்கிறது. பண நீக்க மதிப்புக்கு பிறகு வங்கிகளில் எவ்வளவு பணம் டெபாசிட் ஆனது என்பது பற்றி இதுவரை விளக்கம் அளிக்கப்படவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story