சென்னை-பெங்களூரு-மைசூரு அதிவேக ரயில் திட்ட ஆய்வு துவக்கம்


சென்னை-பெங்களூரு-மைசூரு அதிவேக ரயில் திட்ட ஆய்வு துவக்கம்
x
தினத்தந்தி 28 Jun 2017 10:42 AM GMT (Updated: 28 Jun 2017 10:42 AM GMT)

சென்னை-பெங்களூரு-மைசூரு இடையிலான அதிவேக ரயில் போக்குவரத்து தொடர்பான சாத்தியக்கூறு ஆய்வுப்பணியை ஜெர்மன் நிறுவனம் துவங்கியுள்ளது.

புதுடெல்லி

இது தொடர்பாக மூன்று நிறுவனங்களை ஜெர்மன் நியமித்துள்ளது. விரிவான ஆய்வறிக்கையை தயாரிக்கும் செலவினை ஜெர்மன் ஏற்கும். இந்த ரயில் சுமார் 450 கி.மீட்டர் தூரமுள்ள தூரத்தை மணிக்கு 300 கி.மீட்டர் வேகத்தில் சென்று கடக்கும் என்று கூறப்படுகிறது.

ஜெர்மனியுடன் இந்த ரயில் திட்டம் தொடர்பான கூட்டறிக்கையை 2015 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் வெளியிடப்பட்டது. ஜெர்மனி இத்திட்டம் தொடர்பாக ஆர்வம் கொண்டிருந்ததால் 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு ஜெர்மன் அரசுடன் ரயில்வே துறை தொடர்
ஒப்பந்தம் ஒன்றை கையெழுத்திட்டார். இதில் இந்த அதிவேக ரயில் திட்டமும் ஒன்று.

அதன் பின்னர் இத்திட்டத்தை விரைந்து நிறைவேற்ற திட்ட சாத்தியக்கூறு தொடர்பான ஆய்வினை துவங்க முடிவெடுக்கப்பட்டது.

இது தொடர்பாக பல கருத்தரங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.



Next Story