லாவலின் ஊழல் வழக்கில் பினராயி விஜயனுக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை: கேரள உயர் நீதிமன்றம்


லாவலின் ஊழல் வழக்கில் பினராயி விஜயனுக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை: கேரள உயர் நீதிமன்றம்
x
தினத்தந்தி 23 Aug 2017 10:04 AM GMT (Updated: 2017-08-23T15:34:30+05:30)

லாவலின் ஊழல் வழக்கில் பினராயி விஜயனுக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை என்று கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருவனந்தபுரம்,

கேரள நீர்மின் நிலையப் பணிகளுக்காக கனடாவை சேர்ந்த எஸ்.என்.சி. லாவலின் என்ற நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது. இதில் ரூ.374.5 கோடி அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதில் சி.பி.ஐ. விசாரணை நடத்தியது.

பினராயி விஜயன் மற்றும் அரசு அதிகாரிகள் 6 பேருக்கு இதில் தொடர்பு இருப்பதாகக் குற்றம்சாட்டப்பட்டது. இவ்வழக்கிலிருந்து பினராயி விஜயன் மற்றும் 6 பேரை விடுவித்து திருவனந்தபுரம் சிறப்பு நீதிமன்றம் கடந்த 2013 ஆம் ஆண்டு  உத்தரவிட்டது. 

இதை எதிர்த்து, கேரள உயர் நீதிமன்றத்தில் சிபிஐ மறு ஆய்வு மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த கேரள உயர் நீதிமன்றம், கேரள முதல் மந்திரி பினராயி விஜயனுக்கு எதிராக ஆதராங்கள் இல்லை என கூறி கீழமை நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்தது. அதேவேளையில், சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட கேரள மின்வாரிய அதிகாரிகள் மூன்று பேர் வழக்கு விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. 

பினராயி விஜயன் 1996 ஆம் ஆண்டு முதல் 1998 ஆம் ஆண்டு வரை கேரள மின் துறை மந்திரியாக பதவி வகித்தார். அப்போது, ஒப்பந்தம் வழங்கியதில் முறைகேட்டில் ஈடுபட்டதாக பினராயி விஜயன் மற்றும் அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு எழுந்தது. 

Next Story