ஐ.ஆர்.சி.டி.சி. ஓட்டல் ஊழல் வழக்கில் சி.பி.ஐ. முன் ஆஜராக 15 நாட்கள் காலஅவகாசம் வேண்டும்: தேஜஸ்வி யாதவ்


ஐ.ஆர்.சி.டி.சி. ஓட்டல் ஊழல் வழக்கில் சி.பி.ஐ. முன் ஆஜராக 15 நாட்கள் காலஅவகாசம் வேண்டும்:  தேஜஸ்வி யாதவ்
x
தினத்தந்தி 26 Sep 2017 9:32 AM GMT (Updated: 2017-09-26T15:02:14+05:30)

பீகார் முன்னாள் முதல் மந்திரி தேஜஸ்வி யாதவ் ஐ.ஆர்.சி.டி.சி. ஓட்டல் ஊழல் வழக்கில் சி.பி.ஐ. முன் ஆஜராக 15 நாட்கள் காலஅவகாசம் வேண்டும் என கேட்டு கொண்டுள்ளார்.

புதுடெல்லி,

ராஷ்டீரிய ஜனதா தள தலைவரான லாலு பிரசாத் யாதவ் ரெயில்வே மந்திரியாக இருந்த காலத்தில் தனது பதவியை தவறாக பயன்படுத்தி 2 ஐ.ஆர்.சி.டி.சி. ஓட்டல்களை தனியார் நிறுவனம் ஒன்றிற்கு ஒப்பந்த அடிப்படையில் வழங்கியுள்ளார்.

அதற்கு பதிலாக பினாமி நிறுவனம் ஒன்றின் வழியே பாட்னா நகரில் 3 ஏக்கர்கள் நிலம் வாங்கியுள்ளார்.

இது தொடர்புடைய வழக்கில் லாலு பிரசாத், அவரது மனைவி ராப்ரி தேவி, அவரது மகன் தேஜஸ்வி மற்றும் முன்னாள் மத்திய மந்திரி பிரேம் சந்த் குப்தாவின் மனைவி சரளா குப்தா ஆகியோர் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்துள்ளது.

இந்த வழக்கில் நேரில் ஆஜராகும்படி பீகார் முன்னாள் முதல் மந்திரி தேஜஸ்வி யாதவுக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பியது.  அதன்படி அவர் இன்று ஆஜராக வேண்டும்.  இந்நிலையில், தேஜஸ்வியின் வழக்கறிஞர் சி.பி.ஐ. முன் ஆஜராகினார்.  அவர், சி.பி.ஐ. முன் தேஜஸ்வி ஆஜராக 15 நாட்கள் காலஅவகாசம் வேண்டும் என கேட்டு கொண்டார்.

Next Story