தேசிய செய்திகள்

புழுதி புயல், இடி–மின்னலுடன் மழை: 5 மாநிலங்களில் 124 பேர் சாவு + "||" + Dust storm, thunder-lightning with the rain: 124 dead in 5 states

புழுதி புயல், இடி–மின்னலுடன் மழை: 5 மாநிலங்களில் 124 பேர் சாவு

புழுதி புயல், இடி–மின்னலுடன் மழை: 5 மாநிலங்களில் 124 பேர் சாவு
உத்தரபிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் கடந்த 2–ந் தேதி இரவு பயங்கர புழுதி புயல் வீசியது. அத்துடன் இடி–மின்னலுடன் பெருமழையும் பெய்தது.

புதுடெல்லி,

தெலுங்கானா, உத்தரகாண்ட் மற்றும் பஞ்சாப் மாநிலங்களிலும் இதைப்போல இடியுடன் கூடிய பெருமழை பெய்தது.

இந்த 5 மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை மற்றும் புழுதி புயலில் சிக்கியும், மின்னல் தாக்கியும் கடந்த 2 நாட்களில் 124 பேர் உயிரிழந்து இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது. இதில் அதிகபட்சமாக உத்தரபிரதேசத்தில் 73 பேரும், ராஜஸ்தானில் 35 பேரும் பலியாகி இருப்பதாக உளதுறை அமைச்சக செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

உத்தரபிரதேசத்தின் ஆக்ரா மாவட்டம்தான் இந்த பேரிடரால் அதிக பாதிப்பை சந்தித்து உள்ளது.

இங்கு பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதற்காக மாநில முதல்–மந்திரி யோகி ஆதித்யநாத் தனது கர்நாடக பயணத்தை பாதியில் முடித்துவிட்டு சொந்த மாநிலம் திரும்பியுள்ளார்.