தேசிய செய்திகள்

ஜம்மு மற்றும் காஷ்மீர் துணை முதல் மந்திரியின் பாதுகாப்பு வாகனம் கால்வாய்க்குள் கவிழ்ந்தது; ஒருவர் பலி + "||" + 1 killed, 5 hurt as vehicle in JK Dy CM's convoy falls into canal

ஜம்மு மற்றும் காஷ்மீர் துணை முதல் மந்திரியின் பாதுகாப்பு வாகனம் கால்வாய்க்குள் கவிழ்ந்தது; ஒருவர் பலி

ஜம்மு மற்றும் காஷ்மீர் துணை முதல் மந்திரியின் பாதுகாப்பு வாகனம் கால்வாய்க்குள் கவிழ்ந்தது; ஒருவர் பலி
ஜம்மு மற்றும் காஷ்மீரின் துணை முதல் அமைச்சர் கவீந்தர் குப்தாவின் பாதுகாப்பு வாகனம் சாலை விபத்தில் சிக்கியதில் அரசு புகைப்படக்காரர் பலியானார்.

ஜம்மு,

ஜம்மு மற்றும் காஷ்மீரில் துணை முதல் அமைச்சர் கவீந்தர் குப்தாவின் பாதுகாப்பு வாகனம் ஒன்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு விட்டு திரும்பி கொண்டு இருந்தது.  அது கிரேட்டர் கைலாஷ் பகுதியில் வந்தபொழுது சாலையில் கவிழ்ந்து கால்வாய்க்குள் விழுந்தது.

இந்த விபத்தில் அரசு தகவல் துறை புகைப்படக்காரர் சுரம் சிங் (வயது 50) பலியானார்.  5 பேர் காயமடைந்து உள்ளனர்.  ஓட்டுநர் சிறிய காயங்களுடன் தப்பி விட்டார்.  சிங்கின் உடல் வாகனத்தில் இருந்து மீட்கப்பட்டு உள்ளது.

ஓட்டுநரின் கட்டுப்பாட்டினை இழந்த நிலையில் வாகனம் விபத்தில் சிக்கியுள்ளது என கூறிய குப்தா, சிங்கின் குடும்பத்தினரை சந்தித்து எனது இரங்கலை தெரிவிப்பேன் என கூறியுள்ளார்.