தேசிய செய்திகள்

ஜம்மு-காஷ்மீர்; என்கவுண்டரில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை + "||" + Five terrorists killed in encounter with security forces in Shopian

ஜம்மு-காஷ்மீர்; என்கவுண்டரில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு-காஷ்மீர்; என்கவுண்டரில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 5 பயங்கரவாதிகள் பலியாயினர். #JammuKashmir
ஷோபியான்,

ஜம்மு-காஷ்மீரின் ஷோபியான் மாவட்டத்தில் பாடிகாம் பகுதியில் நடந்த இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 5 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

இன்று காலை நடந்த இந்த தாக்குதல் சம்பவத்தின் போது, தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். அதனைத் தொடர்ந்து பாதுகாப்பு படையினர் நடத்திய எதிர் தாக்குதலில் 5 தீவிரவதிகள் பலியானார்கள். அங்கு நடந்த தேடுதல் வேட்டையின் போது இந்த சம்பவம் நடைப்பெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


முன்னதாக சனிக்கிழமை ஸ்ரீநகரில் நடந்தப்பட்ட தாக்குதலில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். மேலும் 3 பாதுகாப்புபடை வீரர்கள் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.