தேசிய செய்திகள்

மகாராஷ்டிராவில் கலவரம்; 144 தடை உத்தரவு, இணைய சேவைகள் நிறுத்தம் + "||" + Maharashtra riots; 144 suspension orders, Internet services suspension

மகாராஷ்டிராவில் கலவரம்; 144 தடை உத்தரவு, இணைய சேவைகள் நிறுத்தம்

மகாராஷ்டிராவில் கலவரம்; 144 தடை உத்தரவு, இணைய சேவைகள் நிறுத்தம்
மகாராஷ்டிராவில் கலவரம் காரணமாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் இணைய சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளது. #MaharashtraRiots
அவுரங்காபாத்,

மகாராஷ்டிராவில் ஏற்பட்ட கலவரம் காரணமாக அவுரங்காபாத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, இணைய சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத் மாவட்டத்தில் இரு பிரிவுகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியது. இந்த வன்முறையில் பல கடைகள் மற்றும் வாகனங்கள் தீக்கு இரையாகியது. 50க்கும் மேற்பட்ட கடைகள் அடித்து நொருக்கப்பட்டன. நூற்றுக்கணக்கான இளைஞர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.


இதனையடுத்து போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டு வீசினர். இந்த சம்பவத்தால் போலீசார் உள்பட பலர் காயமடைந்தனர். இதனால் தற்போது அவுரங்காபாத் நகர் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் இணைய சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இப்போது நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.தொடர்புடைய செய்திகள்

1. செங்கோட்டையில் நடந்த கலவரம் தொடர்பாக மேலும் 7 பேர் கைது
செங்கோட்டையில் நடந்த கலவரம் தொடர்பாக மேலும் 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
2. தூத்துக்குடி: ஜூலை 11, 12-ந் தேதிகளில் 144 தடை - ஆட்சியர் உத்தரவு
தூத்துக்குடியில் வீரன் அழகு முத்துக்கோன் பிறந்த நாளை முன்னிட்டு 144 தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். #Thoothukudi
3. மகாராஷ்டிரா; சிறைச்சாலை கைதிகளுக்கு ரேடியோ நிலையம் தொடக்கம்
மகாராஷ்டிராவில் சிறைச்சாலை கைதிகளுக்கு ரேடியோ நிலையம் தொடங்கப்பட்டுள்ளது.
4. மகாராஷ்டிரா; தேசியவாத காங்கிரஸ் உறுப்பினர்கள் 2 பேர் சுட்டுக் கொலை
மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் உறுப்பினர்கள் 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். #NCPMembers #Dead