ஆர்எஸ்எஸ் தொடர்ந்த அவதூறு வழக்கில் ராகுல் காந்தி மீது குற்றச்சாட்டுகள் பதிவு


ஆர்எஸ்எஸ்  தொடர்ந்த அவதூறு வழக்கில் ராகுல் காந்தி மீது குற்றச்சாட்டுகள் பதிவு
x
தினத்தந்தி 12 Jun 2018 6:51 AM GMT (Updated: 12 Jun 2018 6:53 AM GMT)

ஆர்எஸ்எஸ் தொடர்ந்த அவதூறு வழக்கில் ராகுல் காந்தி மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டது. #RahulGandhi

மும்பை,

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடந்த 2014-ம் ஆண்டு மார்ச் 6-ந் தேதி மராட்டிய சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்தின்போது மகாத்மா காந்தி கொலைக்கு ஆர்.எஸ்.எஸ்.தான் காரணம் என குற்றம்சாட்டினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக ஆர்.எஸ்.எஸ். தொண்டர் ஒருவர் தானே மாவட்டம் பிவண்டியில் உள்ள கோர்ட்டில் ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

கடந்த ஏப்ரல் 23-ந் தேதி பிவண்டி கோர்ட்டில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ராகுல் காந்தி ஆஜராகவில்லை. இந்தநிலையில் மே மாதம் 2-ந் தேதி மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தபோதும் ராகுல்காந்தி கோர்ட்டில் ஆஜராகவில்லை. அவர் கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் ஆஜராகவில்லை என அவரது வக்கீ்ல்கள் தெரிவித்தனர். இதையடுத்து ஜூன் 12-ந் தேதி ராகுல் காந்தி நேரில் ஆஜராக வேண்டும் என கோர்ட்டு உத்தரவிட்டது.

இந்நிலையில் கோரேகாவ் பகுதியில் உள்ள கண்காட்சி மையத்தில் நடக்கும் கட்சிக்கூட்டத்தில் கலந்து கொள்ள ராகுல்காந்தி இன்று மும்பைக்கு வருகை தந்தார்.  காலை 11 மணி அளவில் பிவண்டி கோர்ட்டில் ராகுல் காந்தி ஆஜரானார். நீதிமன்றத்தில் ஆஜர் ஆன ராகுல் காந்தி மீது குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டது.  இந்திய தண்டனைச்சட்டம் பிரிவு 499 மற்றும் 500 ஆகிய பிரிவுகளின் கீழ் ராகுல் காந்தி மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. அப்போது ராகுல் காந்தி தரப்பில், எந்த குற்றமும் இழைக்கவில்லை என்று வாதிடப்பட்டது.  இதையடுத்து, வழக்கின் அடுத்தகட்ட விசாரணை வரும் ஆகஸ்ட் 10 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக நீதிமன்றம் தெரிவித்தது. 


Next Story