தேசிய செய்திகள்

காங்கிரஸ் தலைவர் வீட்டின் வெளியே அதிக விஷம் கொண்ட பாம்பை பிடிக்கும் வீடியோ வெளியீடு + "||" + Gujarat Cong leader subdues snake outside home, video creates buzz

காங்கிரஸ் தலைவர் வீட்டின் வெளியே அதிக விஷம் கொண்ட பாம்பை பிடிக்கும் வீடியோ வெளியீடு

காங்கிரஸ் தலைவர் வீட்டின் வெளியே அதிக விஷம் கொண்ட பாம்பை பிடிக்கும் வீடியோ வெளியீடு
குஜராத்தில் மூத்த காங்கிரஸ் தலைவர் ஒருவர் தனது வீட்டிற்கு வெளியே அதிக விஷம் கொண்ட பாம்பை பிடிக்கும் வீடியோ வெளியாகி உள்ளது.

அகமதாபாத்,

குஜராத் சட்டசபையின் எதிர்க்கட்சி தலைவராக இருப்பவர் பரேஷ் தனானி.  இவர் முகநூலில் பதிவொன்றை வெளியிட்டு உள்ளார்.  அதில், இது கண்ணாடி விரியன் பாம்பு.  இது தனது வழியை இழந்து விட்டு எனது வீட்டிற்கு வந்துள்ளது.  ஆனால், பாம்புகளை எப்படி பிடிக்க வேண்டும் என்று எனக்கும் தெரியும் என்று பதிவிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், பாம்பின் வாலை பிடித்தபடி தனானி இருக்கிறார்.  ஆனால், விஷம் நிறைந்த பாம்பினை தனது கட்டுக்குள் எளிதில் வைத்திருப்பது போன்று அவர் காட்சி தருகிறார்.  இந்த வீடியோவை அவரது உதவியாளர் படம் பிடித்துள்ளார்.

அதன்பின் அந்த பாம்பு அருகிலுள்ள புதர் பகுதியில் விடப்பட்டு விட்டது என தனானியின் ஊடக ஒருங்கிணைப்பு நிர்வாகியான ஹரேஷ் சிசரா செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.