கோவை கல்லூரியில் பேரிடர் பயிற்சியின்போது மாணவி உயிரிழப்பு; விசாரிக்க 2 தனிப்படைகள் அமைப்பு


கோவை கல்லூரியில் பேரிடர் பயிற்சியின்போது மாணவி உயிரிழப்பு; விசாரிக்க 2 தனிப்படைகள் அமைப்பு
x
தினத்தந்தி 13 July 2018 9:48 AM GMT (Updated: 13 July 2018 9:48 AM GMT)

கோவை கல்லூரியில் பேரிடர் பயிற்சியின்போது மாணவி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. #NDRF #Logeswari #Arumugam



சென்னை,

கோவை தனியார் கல்லூரியில் நடைபெற்ற பேரிடர் மேலாண்மை பயிற்சியின் போது, அக்கல்லூரியில் பிபிஏ 2-ம் ஆண்டு படித்து வந்த லோகேஸ்வரி (19) என்பவர், உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பயிற்சிக்கு முறையாக ஏற்பாடு செய்யப்படவில்லை, மேலிருந்து குதிக்க தயக்கம் காட்டிய மாணவியை வற்புறுத்தி குதிக்க வைத்தாகவும் குற்றம் சாட்டப்படுகிறது. இவ்விவகாரம் தொடர்பாக பயிற்சியாளர் ஆறுமுகம் போலீஸ் கைது செய்துள்ளது. கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு கூறியுள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக விசாரிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. 

பேரூர் காவல் ஆய்வாளர் மனோகரன், ஆலந்துறை காவல் ஆய்வாளர் தங்கம் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

Next Story