தேசிய செய்திகள்

டெல்லியில் ஆயுதங்கள் விற்பனை செய்த 2 பேர் கைது + "||" + 2 arrested in Delhi who sold weapons

டெல்லியில் ஆயுதங்கள் விற்பனை செய்த 2 பேர் கைது

டெல்லியில் ஆயுதங்கள் விற்பனை செய்த 2 பேர் கைது
டெல்லியில் வருகிற 15–ந் தேதி சுதந்திர தின கொண்டாட்டங்கள் நடக்க இருக்கிறது.

புதுடெல்லி,

டெல்லி முழுவதும்  சிறப்பு அதிரடிப்படை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் மேற்குவங்காள மாநிலத்தை சேர்ந்த முகமது ஆசிம், உத்தரபிரதேசத்தை சேர்ந்த ஆஸ் முகமது ஆகிய இருவரும் சுமார் 5 ஆண்டுகளாக டெல்லியில் தங்கி இருந்து சமூகவிரோத கும்பலுக்கு ஆயுதங்களை விற்பனை செய்து வந்ததை சிறப்பு அதிரடிப்படை போலீசார் கண்டுபிடித்தனர்.

இதையடுத்து அவர்களின் நடவடிக்கைகளை ரகசியமாக கண்காணித்து வந்த போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 தானியங்கி துப்பாக்கிகள், 50 கைத்துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.

கைது செய்யப்பட்ட 2 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.