தற்கால அரசியல் தலைவர்கள், வாஜ்பாயிடம் நிறைய கற்க வேண்டியுள்ளது - உ.பி. முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவ் | வாஜ்பாய் மறைவால் தாங்க முடியாத துயரத்தில் உள்ளேன் - பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி இரங்கல் | நாட்டின் உச்ச அதிகாரத்தில் இருந்த மிகச்சிறந்த மனிதரை தேசம் இழந்துள்ளது - புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி | டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் கட்சி கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது | தனது வாழ்நாள் முழுவதையுமே தேச நலனுக்காக அர்ப்பணித்தவர் வாஜ்பாய் - முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் | தலைச்சிறந்த மகனை இந்தியா இழந்துள்ளது - காங். தலைவர் ராகுல்காந்தி இரங்கல் | வாஜ்பாய் மறைவால் தாங்க முடியாத துயரத்தில் உள்ளேன் - பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி இரங்கல் |

தேசிய செய்திகள்

ஜலசமாதி போராட்டம் நடத்த சென்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கைது + "||" + Congress MLAs arrested in Jalasamati protest

ஜலசமாதி போராட்டம் நடத்த சென்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கைது

ஜலசமாதி போராட்டம் நடத்த சென்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கைது
குஜராத்தில் ஜலசமாதி போராட்டம் நடத்த சென்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கைது செய்யப்பட்டனர்.

ராஜ்கோட்,

குஜராத் மாநிலம் ராஜ்கோட் மாவட்டம் புகி கிராமத்தில் பதார் ஆற்றில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. லலித் வசோயா தலைமையில் ஜலசமாதி போராட்டம் நடத்த முயன்றனர். ஜவுளி சாயத் தொழிற்சாலைகளில் இருந்து சுத்திகரிக்கப்படாமல் வெளியேற்றப்படும் கழிவுநீர் இந்த ஆற்றில் கலப்பதற்கு கண்டனம் தெரிவித்து இந்த போராட்டம் நடத்துவதாக அறிவித்தனர்.

லலித் வசோயாவுக்கு ஆதரவாக மேலும் 7 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், பட்டேல் இனத்தலைவர் ஹர்திக் பட்டேல் உள்பட பலர் புகி கிராமத்தில் கூடியிருந்தனர். அப்போது போலீசார் போராட்டம் நடத்த அனுமதியில்லை என்று கூறி அவர்களை கைது செய்தனர்.