பெட்ரோல் விலை உயர்வு, ரூபாய் மதிப்பு வீழ்ச்சி: ரிசர்வ் வங்கி கவர்னருடன் பிரதமர் ஆலோசனை


பெட்ரோல் விலை உயர்வு, ரூபாய் மதிப்பு வீழ்ச்சி: ரிசர்வ் வங்கி கவர்னருடன் பிரதமர் ஆலோசனை
x
தினத்தந்தி 14 Sep 2018 8:45 PM GMT (Updated: 14 Sep 2018 7:54 PM GMT)

பெட்ரோல் விலை உயர்வு, ரூபாய் மதிப்பு வீழ்ச்சி பற்றி ரிசர்வ் வங்கி கவர்னருடன் பிரதமர் ஆலோசனை நடத்தினார்.

புதுடெல்லி,

பொருளாதார பிரச்சினைகள் குறித்த 2 நாள் ஆய்வுக்கூட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கினார். இந்த கூட்டத்தில், மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி, ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் மற்றும் பொருளாதாரம் சார்ந்த கொள்கை முடிவுகளை எடுப்பதில் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில், ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, பெட்ரோல், டீசல் விலை உயர்வு, வளர்ச்சியை அதிகரிக்க தேவையான சீர்திருத்த நடவடிக்கைகள் ஆகியவை பற்றி விவாதிக்கப்பட்டன. இந்த ஆலோசனை இன்றும் நடக்கிறது.

Next Story