தேசிய செய்திகள்

காஷ்மீரில் பிரபல ஓட்டல் தீ விபத்தில் முழுவதும் எரிந்து சாம்பலானது + "||" + Fire destroys Pamposh hotel in Srinagar

காஷ்மீரில் பிரபல ஓட்டல் தீ விபத்தில் முழுவதும் எரிந்து சாம்பலானது

காஷ்மீரில் பிரபல ஓட்டல் தீ விபத்தில் முழுவதும் எரிந்து சாம்பலானது
காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள 6 அடுக்கு ஓட்டல் ஒன்று தீ பிடித்து கொண்டதில் முழுவதும் எரிந்து போனது.

ஸ்ரீநகர்,

ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகரின் மைய பகுதியில் ரீகல் சவுக் என்ற இடத்தில் பேம்போஷ் என்ற பிரபல ஓட்டல் ஒன்று அமைந்திருந்தது.  இது 6 அடுக்குகள் கொண்ட ஓட்டல் ஆகும். இந்த நிலையில், இங்கு உள்ள 6வது தளத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.  இதில் ஓட்டல் கட்டிடம் முழுவதும் தீ பரவியது.

இதனை தொடர்ந்து தகவல் அறிந்து 25 தீயணைப்பு வாகனங்கள் அங்கு குவிக்கப்பட்டன.  அங்கிருந்த ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் உடனடியாக பாதுகாப்புடன் வெளியேற்றப்பட்டனர்.  இந்த தீ விபத்தில் கட்டிடம் முழுவதும் எரிந்து போய் விட்டது.

இந்த கட்டிடத்தில் பத்திரிகை நிறுவனங்கள், தொலைக்காட்சி சேனல்கள் மற்றும் பிற வர்த்தக நிறுவனங்களின் அலுவலகங்கள் செயல்பட்டு வந்துள்ளன.  இந்த தீ விபத்தில் உயிரிழப்பு அல்லது காயம் அடைந்தவர்கள் பற்றிய தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை.