காசி விஸ்வநாதர் கோவிலில் பிரதமர் மோடி வழிபாடு


காசி விஸ்வநாதர் கோவிலில் பிரதமர் மோடி வழிபாடு
x
தினத்தந்தி 18 Sep 2018 3:30 AM GMT (Updated: 18 Sep 2018 3:30 AM GMT)

பிறந்த நாளை முன்னிட்டு காசி விஸ்வநாதர் கோவிலில் பிரதமர் மோடி நேற்று வழிபாடு நடத்தினார்.

வாரணாசி,

பிரதமர் மோடி நேற்று தனது 68-வது பிறந்த நாளை கொண்டாடினார். தனது பிறந்த தினத்தை வாரணாசியில் எளிமையாக பள்ளி மாணவர்களுடன் பிரதமர் மோடி கொண்டாடினார். 

இதையடுத்து, நேற்று வாரணாசியில் உள்ள புகழ்மிக்க புண்ணிய ஸ்தலமான காசி விஸ்வநாதர் கோவிலுக்கு சென்ற பிரதமர் மோடி, அங்கு வழிபாடு நடத்தினார். 

பிரதமர் மோடியுடன், உத்தர பிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத்  உடன் சென்றார். வாரணாசியில் இரண்டாவது நாளாக பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி, அங்கு பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை துவங்கி வைக்கிறார். 

Next Story