தேசிய செய்திகள்

காஷ்மீர் என்கவுண்டரில் 2 ஹிஸ்புல் பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை + "||" + Two Hizbul militants killed in encounter in north Kashmir

காஷ்மீர் என்கவுண்டரில் 2 ஹிஸ்புல் பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

காஷ்மீர் என்கவுண்டரில் 2 ஹிஸ்புல் பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
ஜம்மு காஷ்மீர் என்கவுண்டரில் 2 ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ஸ்ரீநகர்,

வடக்கு காஷ்மீரின் ஹந்தவாராவில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்ததும் பாதுகாப்பு படையினர் அப்பகுதியை சுற்றி வளைத்தனர். அப்போது பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியதும் இருதரப்பு இடையே சண்டை வெடித்தது. இருதரப்புக்கும் இடையே 11 மணி வரையில் சண்டை தொடர்ந்தது. பாதுகாப்பு படை நடத்திய பதிலடி தாக்குதலில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்கள் ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாதிகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொல்லப்பட்ட பயங்கரவாதிகளில் ஒருவரான பஷிர் வானி, அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தில் பிஎச்டி படிப்புக்கு சேர்ந்துள்ளார். பின்னர்தான் படிப்பை நிறுத்திவிட்டு பயங்கரவாத இயக்கத்தில் இணைந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. காஷ்மீரில் பிரிவினைவாதிகள் முழு அடைப்புக்கு அழைப்பு: மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்
காஷ்மீரில் பிரிவினைவாதிகள் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளனர் இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.
2. பாதுகாப்புப் படையினரின் தேடுதல் வேட்டையின்போது 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை;காவலர் வீரமரணம்
ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படையினரின் தேடுதல் வேட்டையின்போது 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை, ஒரு காவலர் வீரமரணம் அடைந்துள்ளார்.
3. ஜம்மு காஷ்மீர் உள்ளாட்சி தேர்தல் ; பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இறுதி கட்ட வாக்குப்பதிவு
ஜம்மு காஷ்மீர் உள்ளாட்சி தேர்தலில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இறுதி கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
4. ஜம்மு காஷ்மீர்: சிஆர்பிஎப் முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல், இரண்டு வீரர்கள் காயம்
ஜம்மு காஷ்மீரில் உள்ள சிஆர்பிஎப் முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில், இரண்டு வீரர்கள் காயம் அடைந்தனர்.
5. ஜம்மு காஷ்மீர் 3 ஆம் கட்ட உள்ளாட்சி தேர்தல்: ஸ்ரீநகரில் வெறும் 1.8 சதவீத வாக்குப்பதிவு
ஜம்மு காஷ்மீரில் இன்று மூன்றாவது கட்டமாக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதிகம் வாசிக்கப்பட்டவை