மானிய சமையல் கியாஸ் விலை உயர்வு
மானிய சமையல் கியாஸ் விலை தற்போது உயர்ந்துள்ளது.
புதுடெல்லி,
சமையல் கியாஸ் விலை மாதந்தோறும் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. வீடுகளுக்கு வினியோகிக்கப்படும் மானிய விலை சமையல் கியாஸ் விலை, சிலிண்டருக்கு ரூ.2.94 வீதம் உயர்த்தப்பட்டது. ஜி.எஸ்.டி. வரியின் தாக்கமே இதற்கு காரணம் என்று இந்திய எண்ணெய் கழகம் தெரிவித்தது. டெல்லியில் ரூ.502.40 ஆக இருந்த கியாஸ் விலை, ரூ.505.34 ஆக உயர்ந்தது.
இந்த விலை உயர்வு, நேற்று நள்ளிரவு அமலுக்கு வந்தது. இது, கடந்த ஜூன் மாதத்தில் இருந்து தொடர்ச்சியாக 6–வது விலை உயர்வு ஆகும். அதுபோல், மானியம் அல்லாத சமையல் கியாஸ் விலை, சிலிண்டருக்கு ரூ.60 உயர்ந்தது. டெல்லியில், அதன் விலை ரூ.880 ஆக அதிகரித்தது.

Related Tags :
Next Story