ஜமகண்டி சட்டசபை இடைத்தேர்தல்; காங்கிரஸ் வேட்பாளர் சித்து யமகவுடா வெற்றி


ஜமகண்டி சட்டசபை இடைத்தேர்தல்; காங்கிரஸ் வேட்பாளர் சித்து யமகவுடா வெற்றி
x
தினத்தந்தி 6 Nov 2018 6:57 AM GMT (Updated: 6 Nov 2018 6:57 AM GMT)

ஜமகண்டி சட்டசபை இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் சித்து யமகவுடா வெற்றி பெற்றுள்ளார்.

பெங்களூரு,

கர்நாடகாவில் பெல்லாரி, ஷிமோகா, மாண்டியா ஆகிய 3 மக்களவை தொகுதிகளுக்கும், ராம்நகர், ஜமகண்டி ஆகிய 2 சட்டப்பேரவை  தொகுதிகளுக்கும் கடந்த 3ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.

இந்த தேர்தலில் நக்சல்கள் அச்சுறுத்தலை அடுத்து பாதுகாப்பு பணிக்காக சுமார் 20 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.

இந்த நிலையில், இந்த 5 இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதில், ஜமகண்டி சட்டசபை இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் சித்து யமகவுடா 39,480 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.  

இதனை அடுத்து காங்கிரஸ் தொண்டர்கள் ஒருவருக்கொருவர் இனிப்புகளை வழங்கி மகிழ்ச்சியுடன் வெற்றியை கொண்டாடினர்.

இதேபோன்று ராம்நகரில் மதசார்பற்ற ஜனதா தள வேட்பாளர் அனிதா குமாரசாமி 1 லட்சத்து 5 ஆயிரத்து 294 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் உக்ரப்பா, பெல்லாரி தொகுதியில் 2 லட்சத்து 14 ஆயிரத்து 48 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்.  மதசார்பற்ற ஜனதாதள கட்சியின் சிவராமகவுடா 2 லட்சத்து 33 ஆயிரத்து 517 வாக்குகள் வித்தியாசத்தில் மாண்டியா தொகுதியில் முன்னிலை வகிக்கிறார்.  பாரதீய ஜனதாவின் ராகவேந்திரா, ஷிமோகா தொகுதியில் 47,388 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்.

Next Story