சி.பி.ஐ., ஆர்.பி.ஐ. போன்ற அரசு அமைப்புகளை பா.ஜனதா அரசு சிதைக்கிறது -மம்தா பானர்ஜி விமர்சனம்


சி.பி.ஐ., ஆர்.பி.ஐ. போன்ற அரசு அமைப்புகளை பா.ஜனதா அரசு சிதைக்கிறது -மம்தா பானர்ஜி விமர்சனம்
x
தினத்தந்தி 16 Nov 2018 9:45 AM GMT (Updated: 16 Nov 2018 9:45 AM GMT)

சிபிஐ, ஆர்பிஐ போன்ற அரசு அமைப்புகளை பா.ஜனதா அரசு சிதைக்கிறது என்று மம்தா பானர்ஜி விமர்சனம் செய்துள்ளார்.

கொல்கத்தா,

கொல்கத்தாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய மம்தா பானர்ஜி, “அவர்கள் (பா.ஜனதா அரசு)  அரசு அமைப்புகளை சிதைக்கிறது. அவர்கள் சிபிஐ மற்றும் ஆர்பிஐ போன்ற அரசு அமைப்புகளின் செயல்பாட்டை மாற்ற முயற்சி செய்கிறார்கள். இதுபோன்ற அழிவுகளில் இருந்து தேசத்தை காப்பாற்றுவதில் முக்கியமான பங்கை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வகிக்கும்,” என்று கூறினார். 

தேசிய குடிமக்கள் பதிவு (என்ஆர்சி) மூலம் மக்களை மதரீதியாக பிரிப்பதிலே பா.ஜனதா நாட்டம் கொண்டுள்ளது. இதுபோன்ற நடவடிக்கையை திரிணாமுல் காங்கிரஸ் சகித்துக்கொள்ளாது. பா.ஜனதாவிடம் இருந்து தேசத்தை பாதுகாக்கும் விவகாரத்தில் திரிணாமுல் காங்கிரஸ் வரும் நாட்களில் முக்கிய பணியை மேற்கொள்ளும். ஜனவரியில் நடைபெறும் மிகப்பெரிய பேரணியில் எதிர்க்கட்சிகளை ஒன்றாக இணைக்கும் வகையில் எதிர்க்கட்சித் கட்சி தலைவர்கள் கலந்துக்கொள்ளும் வகையில் அழைப்பு விடுப்பேன் என்றும் கூறியுள்ளார். பா.ஜனதா ரத யாத்திரை மேற்கொள்வது குறித்து மம்தா பானர்ஜி பேசுகையில், “காவி கட்சி அரசியல் யாத்திரையை மேற்கொள்கிறது. மறுபுறம் திரிணாமுல் காங்கிரசார் அனைத்து மக்களையும் ஒருங்கிணைக்க யாத்திரையை மேற்கொள்கிறார்கள்,” என்று கூறியுள்ளார். 

Next Story