சர்ச்சை அதிகரித்த நிலையில் ராகுல் காந்திதான் என்னை பாகிஸ்தானுக்கு அனுப்பினார் - சித்து


சர்ச்சை அதிகரித்த நிலையில் ராகுல் காந்திதான் என்னை பாகிஸ்தானுக்கு அனுப்பினார் - சித்து
x
தினத்தந்தி 30 Nov 2018 1:59 PM GMT (Updated: 30 Nov 2018 1:59 PM GMT)

பாகிஸ்தான் பயணம் தொடர்பாக சர்ச்சை அதிகரித்துள்ள நிலையில் ராகுல் காந்திதான் என்னை அனுப்பினார் என்று சித்து கூறியுள்ளது மேலும் சர்ச்சை அதிகரிக்க செய்துள்ளது.

ஐதராபாத்,

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பஞ்சாப் அமைச்சரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான நவ்ஜோத் சிங் சித்து பாகிஸ்தான் சென்ற போது அவர், காலிஸ்தான் ஆதரவு ஆர்வலர் கோபால் சிங் சாவ்லாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவருடைய பாகிஸ்தான் பயணம் மற்றும் காலிஸ்தான் ஆதரவாளருடன் புகைப்படம் போன்ற சம்பவத்தை பா.ஜனதா கடுமையாக சாடியது. பஞ்சாப் மாநில முதல்வர் அம்ரீந்தர் சிங் தடுத்தும் தனிப்பட்டை முறையில் பாகிஸ்தான் முறைக்கு பயணம் செய்துள்ளார் என தெரிவிக்கப்பட்டது. பஞ்சாப்பில் 3 பேர் கொல்லப்பட்ட கையெறி குண்டு தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில்தான் சித்து பாகிஸ்தான் பயணம் மேற்கொண்டார். 

இதுதொடர்பான விமர்சங்கள் தொடர்ந்த நிலையில் ராகுல் காந்திதான் என்னை அனுப்பினார் என்று சித்து கூறியுள்ளது மேலும் சர்ச்சை அதிகரிக்க செய்துள்ளது.  ஏற்கனவே சித்து புகைப்பட விவகாரம் தொடர்பாக ராகுல் காந்தியும் விளக்கம் அளிக்க வேண்டும் என்று பா.ஜனதா தரப்பில் வலியுறுத்தப்படுகிறது. இந்நிலையில், “ராகுல் காந்திதான் என்னுடைய கேப்டன். என்னை அவர்தான் பாகிஸ்தானுக்கு அனுப்பினார்,” என்று சித்து கூறியுள்ளார். அமரீந்தர் சிங் அதிருப்தி அடைந்துள்ளது தொடர்பான கேள்விக்கு இவ்வாறு பதிலளித்துள்ளார். காங்கிரஸ் தலைவர் பாராட்டியுள்ளனர் எனவும் கூறியுள்ளார் சித்து.


Next Story