தேசிய செய்திகள்

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு 13 வாகனங்கள் காணிக்கை + "||" + For Thirupathi Ezhumalayan temple 13 vehicles offering

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு 13 வாகனங்கள் காணிக்கை

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு 13 வாகனங்கள் காணிக்கை
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு, 13 வாகனங்கள் காணிக்கையாக வழங்கப்பட்டது.
திருமலை,

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ரூ.1 கோடியே 90 லட்சம் செலவில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் 5 லாரிகள், 6 பேட்டரி கார்கள், 2 குடிநீர் டேங்கர் லாரிகள் ஆகியவற்றை காணிக்கையாக வழங்கி உள்ளது. அதனை, தேவஸ்தான அதிகாரிகள் பெற்றுக்கொண்டனர். தேவஸ்தான பொருட்கள், லட்டு பிரசாதம் ஆகியவற்றை ஏற்றிச்செல்ல 2 லாரிகள் பயன்படுத்தப்படும்.


தேவஸ்தான என்ஜினீயரிங் துறை சம்பந்தமாக கட்டிடங்கள் கட்டும் பணிகளுக்கு 3 லாரிகள் சிமெண்டு, கம்பி, மணல் ஆகியவற்றை ஏற்றிச்செல்ல பயன்படுத்தப்படும். சாமி தரிசனம் செய்யவரும் முதியோர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு 6 பேட்டரி கார்கள் பயன்படுத்தப்படும். உள்ளூர் மக்கள், பக்தர்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய டேங்கர் லாரிகள் பயன்படுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


தொடர்புடைய செய்திகள்

1. திருப்பதியில் கடத்தப்பட்ட குழந்தை மராட்டியத்தில் மீட்பு
திருப்பதியில் கடத்தப்பட்ட குழந்தை மராட்டிய மாநிலத்தில் மீட்கப்பட்டது.
2. திருப்பதியை தொடர்ந்து திருமலையிலும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை: 10-ந்தேதிக்கு பிறகு அமல்
திருப்பதியை தொடர்ந்து திருமலையிலும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இது வரும் 10-ந்தேதிக்கு பிறகு அமல்படுத்தப்பட உள்ளது.
3. திருப்பதியில் தொழிலாளி படுகொலை: காஞ்சீபுரத்தை சேர்ந்த 3 பேர் கைது
திருப்பதியில் தொழிலாளி படுகொலை சம்பவத்தில், காஞ்சீபுரத்தை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
4. புதையல் எடுக்க சுற்றி திரிந்த மந்திரவாதிகள் எலுமிச்சையை ஆகாயத்தில் பறக்கவிட்டு பயமுறுத்தினர்
திருப்பதி அருகே பழமையான கோவிலில் புதையல் இருப்பதாக கூறி எலுமிச்சை பழங்களை பறக்க விட்டு மந்திரவாதிகள் பூஜை நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
5. நெல்லையில் இருந்து நவதிருப்பதி கோவில்களுக்கு சிறப்பு பஸ் இயக்கம்
புரட்டாசி சனிக்கிழமையையொட்டி நெல்லையில் இருந்து நவதிருப்பதி கோவில்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.