தேசிய செய்திகள்

தெலுங்கானா, மத்தியபிரதேசம், சத்தீஷ்கார், ராஜஸ்தான், மிசோரம்: 5 மாநிலங்களில் ஆட்சியை பிடிப்பது யார்? - இன்று ஓட்டு எண்ணிக்கை + "||" + Telangana, Madhya Pradesh, Chhattisgarh, Rajasthan, Mizoram: Who catches rule in 5 states? - Today vote count

தெலுங்கானா, மத்தியபிரதேசம், சத்தீஷ்கார், ராஜஸ்தான், மிசோரம்: 5 மாநிலங்களில் ஆட்சியை பிடிப்பது யார்? - இன்று ஓட்டு எண்ணிக்கை

தெலுங்கானா, மத்தியபிரதேசம், சத்தீஷ்கார், ராஜஸ்தான், மிசோரம்: 5 மாநிலங்களில் ஆட்சியை பிடிப்பது யார்? - இன்று ஓட்டு எண்ணிக்கை
சட்டசபை தேர்தல் நடைபெற்ற தெலுங்கானா, மத்தியபிரதேசம், சத்தீஷ்கார், ராஜஸ்தான், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் இன்று ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்த மாநிலங்களில் ஆட்சியை பிடிப்பது யார்? என்பது இன்று பிற்பகலில் தெரிந்துவிடும்.
ஐதராபாத்,

90 இடங்களை கொண்ட சத்தீஷ்கார் மாநில சட்டசபைக்கு நவம்பர் 12 மற்றும் 20-ந்தேதிகளில் இரு கட்டங்களாகவும், 230 இடங்களை கொண்ட மத்தியபிரதேச சட்டசபைக்கும், 40 இடங்களை கொண்ட மிசோரம் சட்டசபைக்கும் நவம்பர் 28-ந் தேதியும் தேர்தல் நடைபெற்றது.

119 இடங்களை கொண்ட தெலுங்கானா சட்டசபைக்கும், 200 இடங்களை கொண்ட ராஜஸ்தான் சட்டசபைக்கும் கடந்த 7-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. ராஜஸ்தானில் ஒரு தொகுதியில் வேட்பாளர் மரணம் அடைந்ததால் 199 தொகுதிகளில் தேர்தல் நடந்தது.

இந்த 5 மாநிலங்களிலும் மொத்தம் 679 சட்டசபை தொகுதிகள் உள்ளன. 8,500-க்கும் அதிகமான வேட்பாளர்கள் போட்டியிட்டனர். ஒரு லட்சத்து 74 ஆயிரத்துக்கும் அதிகமாக வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. ஓட்டுப்பதிவுக்கு பின்னர் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டன.

5 மாநிலங்களிலும் இன்று (செவ்வாய்க்கிழமை) வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்குகிறது. இதையொட்டி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இந்த மாநிலங்களில் எந்த கட்சி ஆட்சியை பிடிக்கும் என்பது இன்று பிற்பகலில் தெரிந்து விடும்.

தெலுங்கானா மாநிலத்தை பொறுத்தவரை, அங்கு முதல்-மந்திரியாக இருந்த தெலுங்கானா ராஷ்டிர சமிதியின் தலைவர் சந்திரசேகர ராவ் சட்டசபையை முன்கூட்டியே கலைத்துவிட்டு தேர்தலை சந்தித்தார். தெலுங்கானா ராஷ்டிர சமிதி, காங்கிரஸ்-தெலுங்குதேசம், பாரதீய ஜனதா ஆகிய 3 அணிகள் போட்டியிட்டன. இங்கு மொத்தம் உள்ள 119 தொகுதிகளில் 1,821 வேட்பாளர் போட்டியிட்டனர். இங்கு 43 மையங்களில் ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது.

மத்தியபிரதேசம், சத்தீஷ்கார், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் ஆளும் பாரதீய ஜனதாவுக்கும், காங்கிரசுக்கும் இடையேதான் கடும் போட்டி நிலவியது.

மிசோரம் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ், எதிர்க்கட்சியான மிசோ தேசிய முன்னணி ஆகியவை மொத்தம் உள்ள 40 தொகுதிகளிலும் போட்டியிட்டன. பாரதீய ஜனதா 39 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியது. அங்கு 13 மையங்களில் வாக்குகள் எண்ணப்படுகின்றன.

தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளில் ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்க வாய்ப்பு இருப்பதாகவும், மத்தியபிரதேசம், சத்தீஷ்கார் மாநிலங்களில் யாருக்கு வெற்றி? என்பதில் இழுபறி ஏற்படலாம் என்றும், தெலுங்கானாவில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி வெற்றியை தக்கவைத்துக்கொள்ளும் என்றும் தெரியவந்து இருக்கிறது.

இன்னும் சில மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் இந்த 5 மாநிலங்களின் சட்டசபை தேர்தல் முடிவு நாடு முழுவதும் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தலுக்கு இந்த 5 மாநில தேர்தல் முடிவு ஒரு முன்னோட்டமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

கடந்த 2014-ம் ஆண்டில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் மத்தியபிரதேசம், சத்தீஷ்கார், ராஜஸ்தான் ஆகிய 5 மாநிலங்களில் மொத்தம் உள்ள 65 தொகுதிகளில் 63 தொகுதிகளை பாரதீய ஜனதா கைப்பற்றியது. இந்த மாநிலங்களில் தற்போது பாரதீய ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது.

எனவே இந்த 3 மாநிலங்களின் தேர்தல் முடிவு பாரதீய ஜனதா கட்சியை பொறுத்தவரை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.


தொடர்புடைய செய்திகள்

1. தேர்தல் முடிவு வெளியாகி 18 நாட்களாகிறது தெலுங்கானா எம்.எல்.ஏ.க்கள் இன்னும் பதவி ஏற்கவில்லை
119 உறுப்பினர்களை கொண்ட தெலுங்கானா சட்டசபைக்கு கடந்த 7–ந்தேதி தேர்தல் நடந்து 11–ந்தேதி முடிவுகள் அறிவிக்கப்பட்டது.
2. ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சத்தீஷ்கார் மாநிலங்களில் காங்கிரஸ் முதல்-மந்திரிகள் பதவி ஏற்றனர் - ம.பி.யில் விவசாய கடனை ரத்துசெய்து கமல்நாத் முதல் உத்தரவு
ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சத்தீஷ்கார் மாநிலங்களில் நேற்று காங்கிரஸ் முதல்-மந்திரிகள் பதவி ஏற்றனர். மத்தியபிரதேச முதல்-மந்திரியாக கமல்நாத் பதவி ஏற்றதும் விவசாய கடனை ரத்துசெய்து முதல் உத்தரவு பிறப்பித்தார்.
3. தெலுங்கானா முதல்-மந்திரியாக சந்திரசேகர ராவ் பதவி ஏற்பு
தெலுங்கானா மாநில முதல்-மந்திரியாக சந்திரசேகர ராவ் 2–வது முறையாக நேற்று பதவி ஏற்றுக் கொண்டார்.
4. மத்தியபிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கார் மாநிலங்களில் ஆட்சி அமைக்க காங்கிரஸ் தீவிரம்
மத்தியபிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கார் மாநிலங்களில் ஆட்சி அமைக்கும் முயற்சியில் காங்கிரஸ் மேலிடம் ஈடுபட்டுள்ளது. முதல்-மந்திரியை தேர்வு செய்யும் பொறுப்பை கட்சி தலைவர் ராகுல்காந்தியிடம் எம்.எல்.ஏ.க்கள் ஒப்படைத்து இருக்கிறார்கள்.
5. மத்திய பிரதேசம், சத்தீஷ்கார், ராஜஸ்தானில் முதல்வர் யார்? ராகுல் காந்தி அறிவிக்கிறார்
மத்தியபிரதேசம், சத்தீஷ்கர், ராஜஸ்தானில் முதல்வர் யார்? என்பதை ராகுல் காந்தி அறிவிக்கிறார்.