5 மாநில தேர்தல்களில் பா.ஜனதா பின்னடைவு, 2019 தேர்தலுக்கான ‘கவுண்டவுன்’ தொடங்கியது -மம்தா பானர்ஜி


5 மாநில தேர்தல்களில் பா.ஜனதா பின்னடைவு, 2019 தேர்தலுக்கான ‘கவுண்டவுன்’ தொடங்கியது -மம்தா பானர்ஜி
x
தினத்தந்தி 11 Dec 2018 11:52 AM GMT (Updated: 11 Dec 2018 11:52 AM GMT)

5 மாநில தேர்தல்களில் பா.ஜனதா பின்னடவை சந்தித்துள்ளது தொடர்பாக மம்தா பானர்ஜி கருத்து தெரிவிக்கையில் 2019 பாராளுமன்றத் தேர்தலுக்கான கவுண்டவுன் தொடங்கியது என கூறியுள்ளார்.

கொல்கத்தா,

2019 பாராளுமன்றத் தேர்தலுக்கு அரையிறுதி தேர்தலாக பார்க்கப்பட்ட 5 மாநில தேர்தல்களில் பா.ஜனதா பின்னடவை சந்தித்துள்ளது. மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஷ்காரில் காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் தொண்டர்கள் வெற்றியை கொண்டாடி வருகின்றனர். தேர்தல் நிலவரம் தொடர்பாக மேற்கு வங்காள மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கருத்து தெரிவிக்கையில், இது மக்களின் தீர்ப்பு மற்றும் அவர்களுக்கான வெற்றியென்றும் குறிப்பிட்டுள்ளார். 

ஜனநாயகத்திற்கான வெற்றி, அநீதி, அரசு நிறுவனங்கள் சீர்குலைப்பு, விசாரணை முகமைகளை தவறாக பயன்படுத்தியது, ஏழை மக்கள், விவசாயிகள், இளைஞர்கள், சிறுபான்மையினர், பொதுப்பிரிவினருக்கு எதிராக பணியாற்றாததற்கு எதிரான வெற்றியாகும். அரையிறுதித் தேர்தலில் பா.ஜனதாவிற்கு இடமில்லை என்பதை உறுதி செய்துள்ளது. 2019 இறுதிப்போட்டிக்கு உண்மையான ஜனநாயக அறிகுறியாகும். ஜனநாயகத்தில் மக்கள்தான் மேன் ஆப் தி மேட்ச் ஆவார்கள். வெற்றியாளருக்கு என்னுடைய வாழ்த்துக்கள் என மம்தா பானர்ஜி கூறியுள்ளார். 

Next Story