தேசிய செய்திகள்

5 மாநில தேர்தல் முடிவுகள் பிரதமர் மோடிக்கு கிடைத்திருக்கக் கூடிய மிகப்பெரிய அடி - மு.க. ஸ்டாலின் + "||" + Polls in five states show it was a mini parliamentary election MK Stalin

5 மாநில தேர்தல் முடிவுகள் பிரதமர் மோடிக்கு கிடைத்திருக்கக் கூடிய மிகப்பெரிய அடி - மு.க. ஸ்டாலின்

5 மாநில தேர்தல் முடிவுகள் பிரதமர் மோடிக்கு கிடைத்திருக்கக் கூடிய மிகப்பெரிய அடி - மு.க. ஸ்டாலின்
5 மாநில தேர்தல் முடிவுகள் பிரதமர் மோடிக்கு கிடைத்திருக்கக் கூடிய மிகப்பெரிய அடி என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை,

நாடாளுமன்றத்துக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆளும் பாரதீய ஜனதா கூட்டணியை தோற்கடிக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு உள்ளன.  இந்நிலையில் 5 மாநில தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளது. ஆளும் பா.ஜனதாவிற்கு பெரும் பின்னடைவாக முடிவுகள் அமைந்துள்ளது. சத்தீஷ்கார், ராஜஸ்தானில் ஆட்சியை இழக்கிறது. மத்திய பிரதேசத்திலும் ஆட்சி கையைவிட்டு நழுவுகிறது.  தேர்தல் முடிவுகள் குறித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பேசுகையில், 5 மாநில தேர்தல் முடிவுகள் பிரதமர் மோடிக்கு கிடைத்திருக்கக் கூடிய மிகப்பெரிய அடி என கூறியுள்ளார். 

மு.க. ஸ்டாலின் பேசுகையில், 5 மாநில தேர்தலை பொறுத்தவரை மினி பார்லிமெண்ட் தேர்தல் என்பதுதான் என்னுடைய கருத்து. வரும் 2019 தேர்தலில் முழுமையான வெற்றியாக வரும் என்று பார்க்கிறோம். பா.ஜனதாவின் கோட்டையாக விளங்கிய மாநிலங்களிலும் காங்கிரஸ் ஆட்சியை பிடித்துள்ளது. வளர்ச்சியான இந்தியாவை உருவாக்கப்போவதாக கூறினார். ஆனால் உருவாகவில்லை. பா.ஜனதா இல்லாத இந்தியாவை உருவாக்குவோம் என்று சொல்லமாட்டோம். வெற்றி பெற்றவர்களுக்கு திமுக வாழ்த்தை தெரிவிக்கிறது என கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

1. தே.மு.தி.க. வராமல் போனால் கூட்டணி கட்சிகளுக்கு கூடுதல் இடங்கள் ஒதுக்க ஸ்டாலின் ஆலோசனை
தே.மு.தி.க. வராமல் போனால் கூட்டணி கட்சிகளுக்கு கூடுதல் இடங்கள் ஒதுக்குவது பற்றி ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.
2. கல்வி கடனை தள்ளுபடி செய்வோம்; மு.க. ஸ்டாலின் பேச்சு
மத்தியில் தி.மு.க. கூட்டணி ஆட்சி அமைந்தவுடன் கல்வி கடன் தள்ளுபடி செய்யப்படும் என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பேசியுள்ளார்.
3. நாடாளுமன்ற தேர்தலோடு சட்டசபை பொதுத்தேர்தலும் வரவேண்டும் என்பது மக்கள் எதிர்பார்ப்பு; ஸ்டாலின் பேச்சு
நாடாளுமன்ற தேர்தலோடு இடைத்தேர்தல் மட்டுமல்ல, சட்டசபை பொதுத்தேர்தலும் வரவேண்டும் என மக்கள் எதிர்பார்ப்பதாக மு.க. ஸ்டாலின் பேசியுள்ளார்.
4. ஊராட்சி சபை கூட்டம் பற்றி ஒரே மேடையில் விவாதிக்க முதல் அமைச்சர் தயாரா? மு.க. ஸ்டாலின் கேள்வி
ஊராட்சி சபை கூட்டம் பற்றி ஒரே மேடையில் விவாதிக்க முதல் அமைச்சர் தயாரா என மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
5. ஜெயலலிதா மரணத்திற்கு காரணம் யார்? தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் கண்டுபிடிக்கப்படும்; மு.க. ஸ்டாலின்
ஜெயலலிதா மரணத்திற்கு காரணம் யார் என்று தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் கண்டுபிடிக்கப்படும் என மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.