மத்தியபிரதேசத்தில் தொடரும் ‘நீயா, நானா?’ மோதல் காங்கிரஸ் - பா.ஜனதா சரிசமம்


மத்தியபிரதேசத்தில் தொடரும் ‘நீயா, நானா?’ மோதல் காங்கிரஸ்  - பா.ஜனதா சரிசமம்
x
தினத்தந்தி 11 Dec 2018 3:11 PM GMT (Updated: 11 Dec 2018 3:11 PM GMT)

மத்தியபிரதேசம் மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா சரிசமமான தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது.

மத்திய பிரதேசம் மாநிலத்தில் மொத்தம் உள்ள 230 தொகுதிகளின் தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகிறது. மாநிலத்தில் ஆளும் பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் இடையே சரியான போட்டி நிலவி வருகிறது. முன்னிலையில் அவ்வப்போது மாற்றம் நேரிட்டுவருகிறது. மாலையில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் அளவு முன்னிலை பெற்ற நிலையில் மீண்டும் நெருங்கிய மோதல் நீடித்தது. காங்கிரஸ் 113, பா.ஜனதா 110 என முன்னிலை நிலவரம் இருந்தது. இப்போது அதில் மாற்றம் நேரிட்டுள்ளது. இரு கட்சிகளும் சரிசமமான தொகுதிகளில் முன்னிலைப் பெற்றுள்ளது.

மத்திய பிரதேசத்தில்  ‘நீயா, நானா?’ மோதல் தொடரும் நிலையில் கட்சிகள் முன்னிலை நிலவரம்:-

காங்கிரஸ்- 111

பா.ஜனதா - 111

பகுஜன் சமாஜ்- 2

சமாஜ்வாதி -1

ஜிஜிபி-1

சுயேச்சை- 4

மாநிலத்தில்  மாயாவதி,  அகிலேஷ் மற்றும் சுயேட்சைகள் கிங் மேக்கர்களாக இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இங்கு ஆட்சி அமைக்கத் தேவையான 116 தொகுதிகள் இரு தேசியக் கட்சிக்கும் கிடைக்காத நிலை உருவாகியுள்ளது.

Next Story