தேசிய செய்திகள்

மூன்று காங்கிரஸ் முதல் மந்திரிகள் இன்று பதவியேற்பு + "||" + At Congress Swearing-In Hat-Trick Today, All Eyes On Absentees

மூன்று காங்கிரஸ் முதல் மந்திரிகள் இன்று பதவியேற்பு

மூன்று காங்கிரஸ் முதல் மந்திரிகள் இன்று பதவியேற்பு
மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கர் ஆகிய மாநிலங்களில் முதல் மந்திரியாக தேர்வு செய்யப்பட்டவர்கள் இன்று பதவியேற்கிறார்கள்.
புதுடெல்லி,

அண்மையில் நடந்து முடிந்த 5 மாநில சட்ட மன்ற தேர்தலில் மூன்று மாநிலங்களில்  காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கிறது. காங்கிரஸ் வெற்றி பெற்ற மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கர் ஆகிய மூன்று மாநிலங்களிலும் முதல் மந்திரிகள் யார் என்பதில் காங்கிரஸ் கட்சிக்குள் கடும் போட்டி நிலவியது. கடந்த சில நாள்களாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இல்லத்தில் நடைபெற்ற பல கட்ட ஆலோசனைகளுக்குப் பிறகு, மத்தியப் பிரதேச முதல் மந்திரியாக  அந்த மாநில மூத்த தலைவர் கமல்நாத் பெயர் அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து ராஜஸ்தான் முதல் மந்திரியாக  அசோக் கெலாட், துணை முதல் மந்திரியாக சச்சின் பைலட் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். 

 சத்தீஸ்கர் முதல் மந்திரியாக  அந்த மாநில காங்கிரஸ் மூத்த தலைவர் பூபேஷ் பகேல் பெயர் நேற்று அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மூன்று முதல் மந்திரிகளும், துணை முதல் மந்திரி ஒருவரும் இன்று பதவியேற்க இருக்கின்றனர். இந்த மூன்று பதவியேற்பு நிகழ்ச்சிகளிலுமே காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் மூன்று மாநிலங்களுக்கும் பயணிப்பதற்கு ஏற்ப, பதவியேற்பு நேரம் முடிவு செய்யப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் முதல் மந்திரியாக  அசோக் கெலாட், துணை முதல் மந்திரியாக  சச்சின் பைலட் ஆகியோர் ஜெய்ப்பூரில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஆல்பர்ட் மண்டபத்தில் காலை 10 மணியளவில் பதவியேற்க இருக்கின்றனர்.

மத்திய பிரதேச மாநிலம், போபாலில் உள்ள ஜம்பூரி மைதானத்தில் இன்று  பகல் 1.30 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில் மத்தியப் பிரதேச முதல் மந்திரியாக கமல்நாத் பதவியேற்க இருக்கிறார். அவருக்கு ஆளுநர் ஆனந்திபென் படேல் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். 

சத்தீஸ்கர் மாநில முதல் மந்திரியாக  பூபேஷ் பகேல், ராய்ப்பூரில் இன்று  மாலை 5 மணிக்கு பதவியேற்க இருக்கிறார்.  இன்று அவர் மட்டுமே முதல் மந்திரியாகப் பதவியேற்கிறார்,  மந்திரிகள் யாரும் பதவியேற்க வாய்ப்பில்லை என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த பதவியேற்பு நிகழ்ச்சியிலும் ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்க இருக்கின்றனர்

தொடர்புடைய செய்திகள்

1. முதல்-மந்திரி குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசு மீது சித்தராமையா அதிருப்தி “எனது பேச்சுக்கு மதிப்பில்லை” என பரபரப்பு குற்றச்சாட்டு
முதல்-மந்திரி குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசில் எனது பேச்சுக்கு மதிப்பில்லை என்று கூட்டணி ஒருங்கிணைப்பு குழு தலைவர் சித்தராமையா அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
2. பீகாரில் மூளை காய்ச்சலுக்கு 109 குழந்தைகள் பலி; முதல் மந்திரி மீது பொதுநல வழக்கு
பீகாரில் மூளை காய்ச்சல் நோய்க்கு 109 குழந்தைகள் பலியான விவகாரத்தில் முதல் மந்திரி மீது பொதுநல வழக்கு தொடரப்பட்டு உள்ளது.
3. வருகிற 2021ம் ஆண்டுக்குள் மம்தாவின் அரசு கவிழும்; பா.ஜ.க.
வருகிற 2021ம் ஆண்டுக்குள் மேற்கு வங்காளத்தில் மம்தா தலைமையிலான அரசு கவிழும் என பா.ஜ.க. தெரிவித்துள்ளது.
4. முதல்-மந்திரி பதவி வழங்காமல் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அநீதி தேர்தல் பிரசாரத்தில் குமாரசாமி பேச்சால் காங்கிரசில் சலசலப்பு
முதல்-மந்திரி பதவி வழங்காமல் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக குமாரசாமி கூறிய கருத்தால் காங்கிரசில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
5. தெலுங்கானா முதல் மந்திரியுடனான ஸ்டாலின் சந்திப்பு மரியாதை நிமித்தமானது; தி.மு.க. அறிக்கை
தெலுங்கானா முதல் மந்திரியுடனான ஸ்டாலின் சந்திப்பு மரியாதை நிமித்தமானது என தி.மு.க. தலைமை தெரிவித்து உள்ளது.