எதிர்க்கட்சிகள் கடும் அமளி: மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு


எதிர்க்கட்சிகள் கடும் அமளி: மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு
x
தினத்தந்தி 27 Dec 2018 7:07 AM GMT (Updated: 27 Dec 2018 7:14 AM GMT)

எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால், மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு பிறகு இன்று காலை 11 மணிக்கு மாநிலங்களவை கூடியது. அவை கூடியதும் மேகதாது விவகாரம், புலந்த்ஷெஹர்  வன்முறை ஆகிய பிரச்சினைகளை எழுப்பிய உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். 

அவையின் மையப்பகுதிக்கு வந்த அதிமுக, திமுக எம்.பிக்கள் மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்திற்கு எதிராக கடும் அமளியில் ஈடுபட்டனர்.

அதேபோல், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சி எம்.பிக்கள் புலந்த்ஷெஹர் வன்முறை விவகாரத்தை எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். ஆந்திர பிரதேசத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கக்கோரி தெலுங்கு தேசம் கட்சி எம்.பிக்களும் இந்த அமளியில் இணைந்து கொண்டனர்.

இதையடுத்து, அவையை நாள் முழுவதும் ஒத்திவைப்பதாக அவைத்தலைவர் வெங்கையா நாயுடு அறிவித்தார். இதனால், இன்று எந்த அலுவலும் நடைபெறாமல் மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது.

Next Story