ஆன்லைன் விளையாட்டு மோசடியை தடுக்க மக்களவையில் மசோதா தாக்கல்


ஆன்லைன் விளையாட்டு மோசடியை தடுக்க மக்களவையில் மசோதா தாக்கல்
x
தினத்தந்தி 29 Dec 2018 6:21 PM GMT (Updated: 29 Dec 2018 6:21 PM GMT)

ஆன்லைன் விளையாட்டு மோசடியை தடுக்க மக்களவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

புதுடெல்லி,

ஆன்லைன் மூலம் விளையாடப்படும் பல்வேறு விளையாட்டுகள் இன்று இளைய தலைமுறையினர் மத்தியில் பிரபலமாக விளங்கி வருகின்றன. இதில் சில விளையாட்டுகள் மூலம் கோடிக்கணக்கில் பணமோசடியும் நடைபெறுகிறது. எனவே இதை தடுக்கும் வகையில் மக்களவையில் தனிநபர் மசோதா ஒன்றை காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் தாக்கல் செய்தார். ‘விளையாட்டு (ஆன்லைன் விளையாட்டு மற்றும் மோசடி தடுப்பு) மசோதா’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், ஆன்லைன் விளையாட்டுகள் மூலம் நடைபெறும் மோசடிகள் தடுக்க வகை செய்யப்படும்.

மசோதாவை தாக்கல் செய்து சசிதரூர் கூறுகையில், ‘விளையாட்டுகளால் விளையும் பயன்களை பாதுகாக்க வேண்டுமென்றால், விளையாட்டுகளில் நேர்மை இருப்பது முக்கியமாகும். பல்வேறு மோசடி மற்றும் ஊழல்களால் விளையாட்டு நேர்மைக்கு தற்போது நெருக்கடி அதிகரித்து வருகிறது. இந்த மோசடிகள் மற்றும் சூதாட்டங்களை குற்றமாக்குவதன் மூலம் மேற்படி நேர்மையை எனது மசோதா பாதுகாக்கும்’ என்று நம்பிக்கை தெரிவித்தார்.

Next Story