காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்: பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட எம்.பி. கீர்த்தி ஆசாத்


காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்: பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட எம்.பி. கீர்த்தி ஆசாத்
x
தினத்தந்தி 18 Feb 2019 7:29 AM GMT (Updated: 2019-02-18T12:59:11+05:30)

பாஜகவில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி. கீர்த்தி ஆசாத் ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

புதுடெல்லி,

முன்னாள் கிரிக்கெட் வீரர் கீர்த்திஆசாத். இவர் பாஜக சார்பில்  பீகார் மாநிலம் தர்பாங்கா தொகுதியில் போட்டியிட்டு எம்.பி.யாக தேர்வானவர். இவர், டெல்லி கிரிக்கெட் சங்கத்தில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக தலைவராக இருக்கும் மத்திய மந்திரி அருண் ஜெட்லியை பகிரங்கமாக விமர்சனம் செய்தார். 

இதனால் பா.ஜனதாவில் இருந்து ‘சஸ்பெண்டு’ செய்யப்பட்டார்.  இதையடுத்து காங்கிரஸ் கட்சியில் இணைவது என முடிவெடுத்த அவர்,  காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தியின் முன்னிலையில் இன்று தன்னை காங்கிரஸ் கட்சியில் இணைத்துக் கொண்டார். 

Next Story