பஹவல்பூரில்தான் மசூத் அசார் உள்ளான், பிடித்துக்கொள்ளுங்கள் இம்ரான்கானுக்கு பஞ்சாப் முதல்வர் பதில்


பஹவல்பூரில்தான் மசூத் அசார் உள்ளான், பிடித்துக்கொள்ளுங்கள் இம்ரான்கானுக்கு பஞ்சாப் முதல்வர் பதில்
x
தினத்தந்தி 19 Feb 2019 11:27 AM GMT (Updated: 19 Feb 2019 11:27 AM GMT)

புல்வாமா தாக்குதலில் ஆதாரம் கோரும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு பஞ்சாப் முதல்வர் அம்ரீந்தர் சிங் பதிலளித்துள்ளார்.

40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் எங்களுக்கு எந்த தொடர்பும் கிடையாது என பாகிஸ்தான் மறுக்கிறது. புல்வாமா தாக்குதலுக்கு பாகிஸ்தானியர்கள்தான் காரணம் என ஆவணங்கள் இருந்தாலும், உளவுத்துறை தகவல் இருந்தாலும் எங்களிடம் இந்தியா வழங்கட்டும், நாங்கள் நடவடிக்கையை எடுப்போம் என இம்ரான் கான் பேசியுள்ளார். இதற்கு பதிலளித்துள்ள பஞ்சாப் முதல்வர் அம்ரீந்தர் சிங், பஹவல்பூரில்தான் மசூத் அசார் உள்ளான், பிடித்துக்கொள்ளுங்கள் என உளவுத்துறை தகவலை தெரிவித்துள்ளார். 

அம்ரீந்தர் சிங் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், “இம்ரான் கான் அவர்கள் உங்களுடைய மசூத் அசார் பஹவல்பூரில்தான் உள்ளார். பாகிஸ்தான் உளவுத்துறையின் பாதுகாப்புடன் உள்ளார். அங்கு சென்று பிடித்துக்கொள்ளுங்கள். அதனை உங்களால் செய்ய முடியவில்லை என்றால், எங்களிடம் விட்டுவிடுங்கள் நாங்கள் உங்களுக்காக இப்பணியை செய்கிறோம். மும்பை தாக்குதலில் ஆவணங்கள் வழங்கப்பட்டு நீங்கள் செய்தது என்ன?” என கேள்வியை எழுப்பியுள்ளார். 

 2002-ம் ஆண்டில் இருந்தே ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்கம் பாகிஸ்தானில் தடை செய்யப்பட்டிருந்தாலும் அந்தக் குழுவின் தலைவர் மசூத் அசார் பாகிஸ்தானில் அமைந்துள்ள பஞ்சாப் மாநிலம் பஹவல்பூரில் தங்கியிருப்பதாக கூறப்படுகிறது.

Next Story