சட்டசபை இடைத்தேர்தலில் கமல்நாத் போட்டியிடுவதற்காக காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராஜினாமா


சட்டசபை இடைத்தேர்தலில் கமல்நாத் போட்டியிடுவதற்காக காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராஜினாமா
x
தினத்தந்தி 20 Feb 2019 9:00 PM GMT (Updated: 20 Feb 2019 8:29 PM GMT)

சட்டசபை இடைத்தேர்தலில் கமல்நாத் போட்டியிடுவதற்காக காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராஜினாமா செய்தார்.

போபால்,

மத்திய பிரதேச சட்டசபைக்கு நடந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றதை தொடர்ந்து, அந்த மாநில முதல்-மந்திரியாக அக்கட்சியின் மூத்த தலைவர் கமல்நாத் கடந்த டிசம்பர் மாதம் 17-ந் தேதி பதவி ஏற்றார். ஆனால் அவர் சட்டசபை உறுப்பினராகவோ, மேல்-சபை உறுப்பினராகவோ இல்லாததால், 6 மாதங்களுக்குள் ஏதாவது ஒரு சபையில் உறுப்பினர் ஆகவேண்டும்.

எனவே, கமல்நாத் சட்டசபை உறுப்பினர் ஆவதற்கு வசதியாக சிந்த்வாரா தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. சக்சேனா நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால் அந்த தொகுதிக்கு நடைபெற இருக்கும் இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் முதல்-மந்திரி கமல்நாத் போட்டியிடுவார்.


Next Story