பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி வைத்த சமாஜ்வாடி பற்றி முலாயம் சிங் கடும் விமர்சனம்


பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி வைத்த சமாஜ்வாடி பற்றி முலாயம் சிங் கடும் விமர்சனம்
x
தினத்தந்தி 21 Feb 2019 11:18 AM GMT (Updated: 21 Feb 2019 11:18 AM GMT)

பகுஜன் சமாஜ் கட்சியுடன் சமாஜ்வாடி கட்சி கூட்டணி வைத்ததற்கு அதன் நிறுவனரான முலாயம் சிங் அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளார்.

லக்னோ,

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் கூட்டணி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன.  இந்த நிலையில், உத்தர பிரதேசத்தில் முன்னாள் முதல் மந்திரி அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி கட்சி, மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி ஏற்படுத்தி உள்ளது.

இதுபற்றி லக்னோவில் அமைந்த சமாஜ்வாடி கட்சியின் தலைமையகத்தில் கட்சி தொண்டர்கள் முன் பேசிய அக்கட்சியின் நிறுவனரான முலாயம் சிங், மக்களவை தேர்தலை முன்னிட்டு உத்தர பிரதேசத்தில் உள்ள 50 சதவீத தொகுதிகளை சமாஜ்வாடி கட்சியானது கூட்டணியில் உள்ள பகுஜன் சமாஜ் கட்சிக்கு கொடுத்துள்ளது வருத்தமளிக்கிறது என கூறினார்.

கடந்த சில நாட்களுக்கு முன் நாடாளுமன்றத்தில் நடந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் இறுதியில் பேசிய முலாயம் சிங், பிரதமர் மோடி மீண்டும் ஆட்சி அதிகாரத்திற்கு வரவேண்டும் என நான் விரும்புகிறேன் என்று பேசினார்.

Next Story