மராட்டியத்தில் ரெயில்வே சிக்னல் விளக்கு அட்டை பெட்டியால் மறைப்பு - பயங்கரவாதிகளின் சதிவேலையா?


மராட்டியத்தில் ரெயில்வே சிக்னல் விளக்கு அட்டை பெட்டியால் மறைப்பு - பயங்கரவாதிகளின் சதிவேலையா?
x
தினத்தந்தி 22 Feb 2019 9:08 PM GMT (Updated: 22 Feb 2019 9:08 PM GMT)

மராட்டியத்தில் ரெயில்வே சிக்னல் விளக்கு அட்டை பெட்டியால் மறைக்கப்பட்டது. இது பயங்கரவாதிகளின் சதிவேலையா என விசாரணை நடைபெற்று வருகிறது.

மும்பை,

ராஜஸ்தான் மாநிலம் பிகானிரில் இருந்து பெங்களூரு யஸ்வந்த்பூருக்கு மராட்டிய மாநிலம் கல்யாண் வழியாக இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்து கொண்டு இருந்தது. இந்த ரெயில் கடந்த புதன்கிழமை இரவு 11 மணியளவில் கல்யாண் அருகே உள்ள கோபர் பகுதியில் வந்தது. அப்போது அந்த வழியில் இருக்கும் சிக்னல் கம்பத்தில் எந்த விளக்கும் எரியாமல் இருப்பதை கவனித்த என்ஜின் டிரைவர் ரெயிலின் வேகத்தை குறைத்தார்.

அப்போது சிக்னல் கம்பத்தின் விளக்கு பகுதி, அட்டை பெட்டியால் மறைக்கப்பட்டு இருந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக ரெயிலை நிறுத்தினார். இதுகுறித்து ரெயில்வே கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் ரெயில்வே போலீசார், சிக்னல் மற்றும் தகவல் தொடர்பு ஊழியர்கள் அங்கு விரைந்து சென்று, சிக்னல் கம்பத்தில் இருந்த அட்டை பெட்டியை அகற்றினர்.

சிக்னல் கம்பத்தில் வேடிக்கையாக சமூக விரோதிகள் யாரும் அட்டை பெட்டியை வைத்தார்களா? அல்லது பயங்கரவாதிகளின் சதிவேலையா? என்பது குறித்து ரெயில்வே போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story