காஷ்மீரை போர்க்களமாக மாற்ற ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்: மெகபூபா முப்தி


காஷ்மீரை போர்க்களமாக மாற்ற ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்: மெகபூபா முப்தி
x
தினத்தந்தி 10 March 2019 2:44 AM GMT (Updated: 10 March 2019 2:44 AM GMT)

தேர்தல் ஆதாயத்துக்காக, ஜம்மு-காஷ்மீரை போர்க்களமாக மாற்ற அனுமதிக்க மாட்டோம் என்று மெகபூபா முப்தி தெரிவித்தார்.

ஸ்ரீநகர்,

ஸ்ரீநகரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவரும் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரியுமான மெகபூபா முப்தி கூறியதாவது:- காஷ்மீரில் இரும்புக் கரம் கொண்டு அடக்குவது, காஷ்மீர் மக்களை அச்சுறுத்துவது ஆகியவற்றை மத்திய அரசு செய்து வருகிறது. 

ஜமாத்-ஏ-இஸ்லாமி ஜம்மு-காஷ்மீர் என்ற அமைப்பை தடை செய்திருப்பது ஜனநாயக விரோதமானதும், அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானதும் ஆகும். இதன்மூலம், முஸ்லிம்களின் உணர்வுகள் புண்பட்டது.

அந்த அமைப்பு பள்ளிகளை நடத்தி வருகிறது. அந்த அமைப்பு ஒரு சமூக-மத ரீதியான அமைப்பாகும். காஷ்மீரைச் சேர்ந்த மாணவர்கள் வெளிமாநிலங்களில் தாக்கப்படுகின்றனர். 

பாஜகவின் கொள்கைகளை யார் எதிர்த்தாலும் அதற்காக பழிவாங்கும் நடவடிக்கையில் பாஜக இறங்குகிறது. தேர்தல் ஆதாயத்துக்காக ஜம்மு-காஷ்மீரை போர்க்களமாக மாற்ற பாஜக முயற்சி செய்து வருகிறது. அதை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். அமைதிப் பேச்சுவார்த்தை ஒன்றே காஷ்மீர் பிரச்னைக்குத் தீர்வாக இருக்கும்” இவ்வாறு அவர் தெரிவித்தார். 


Next Story