“மோடியால் சாத்தியப்படும்” - பா.ஜனதாவின் தேர்தல் கோஷம்


“மோடியால் சாத்தியப்படும்” - பா.ஜனதாவின் தேர்தல் கோஷம்
x
தினத்தந்தி 15 March 2019 3:00 AM IST (Updated: 15 March 2019 1:50 AM IST)
t-max-icont-min-icon

மோடியால் சாத்தியப்படும் என்ற வாசகம், பா.ஜனதாவின் தேர்தல் கோஷமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

‘மோடியால் சாத்தியப்படும்’. இதுதான், நாடாளுமன்ற தேர்தலுக்கு பா.ஜனதாவின் கோஷமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை மத்திய நிதி மந்திரியும், பா.ஜனதா பிரசார குழுவின் தலைவருமான அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது:-

மோடி கடந்த 5 ஆண்டுகளில் 24 மணி நேரமும் பணியாற்றி உள்ளார். விரைவாக புரிந்து கொள்ளக்கூடிய அவர், சிக்கலான பிரச்சினைகளில் விரைவாக முடிவெடுத்து அமல்படுத்தினார். ‘செயல்படக்கூடியவர்’ என்ற அவரது நற்பெயர், பெரும்பாலான இந்தியர்களால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

அவரது ஆட்சியில், வேகமாக வளரும் பொருளாதார சக்தியாக இந்தியா உயர்ந்துள்ளது. பணவீக்கம் குறைந்துள்ளது. ஊழலற்ற ஆட்சியை அளித்துள்ளார். அதே அரசு எந்திரத்தை கொண்டு, மோடி இச்சாதனையை படைத்துள்ளார். எனவே, ‘மோடியால் சாத்தியப்படும்’ என்ற கோஷத்தை தேர்வு செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story