கற்பழிப்பு குற்றவாளியை வழக்கில் இருந்து விடுவிக்க லஞ்சம் வாங்கிய கான்ஸ்டபிள் கைது
கற்பழிப்பு குற்றவாளியை வழக்கில் இருந்து விடுவிக்க லஞ்சம் வாங்கிய கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டார்.
ஜெய்ப்பூர்,
ராஜஸ்தானில் தவுசா நகரில் கான்ஸ்டபிளாக இருந்து வருபவர் தரம் சிங். கற்பழிப்பு வழக்கு ஒன்றில் இருந்து விடுவிக்க குற்றவாளி ஒருவர் இவரை அணுகியுள்ளார். குற்றவாளிக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் அவரை விடுவிக்க ரூ.50 ஆயிரம் லஞ்சம் தரும்படி கான்ஸ்டபிள் கேட்டுள்ளார்.
இதில், ரூ.40 ஆயிரம் கொடுப்பது என இரு தரப்பிலும் முடிவாகி உள்ளது. இதன்பின் ரூ.20 ஆயிரம் பணம் பெறும்பொழுது லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டார். குற்றவாளி அளித்த புகாரின் பேரில், விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள் கான்ஸ்டபிளை கைது செய்ய திட்டமிட்டனர். அதன்படி, லஞ்ச தடுப்பு சட்டத்தின் கீழ் சிங் கைது செய்யப்பட்டு உள்ளார்.
Related Tags :
Next Story