பிரிவினைவாதிகள் முழு அடைப்புக்கு அழைப்பு: காஷ்மீரில் இயல்பு வாழ்க்கை முடக்கம்
பிரிவினைவாதிகள் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்ததால் காஷ்மீரில் இயல்பு வாழ்க்கை முடங்கியது.
ஸ்ரீநகர்,
புல்வாமா மாவட்டம் அவந்திபோரா பகுதியை சேர்ந்த ஆசிரியர் ரிஸ்வான் அசாத் பண்டிட்டை பயங்கரவாத தொடர்பு காரணமாக தேசிய புலனாய்வு பிரிவு கைது செய்தது. அவரை விசாரணை செய்துவந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அவர் உயிரிழந்தார். காவல்துறை கட்டுப்பாட்டில் இருந்தபோது ரிஸ்வான் உயிரிழந்ததை கண்டித்து, காஷ்மீரில் இன்று முழு அடைப்புக்கு பிரிவினைவாதிகள் அழைப்பு விடுத்து இருந்தனர்.
இந்த முழு அடைப்பு அழைப்பால், கஷ்மீரில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பள்ளிகள், கல்லூரிகள், மூடப்பட்டு இருந்தன. கடைகள் மற்றும் வணிக வளாகங்களும் மூடப்பட்டு இருந்ததால், கடை வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டன. பொது போக்குவரத்து சேவையும் இயக்கப்படவில்லை. ஒரு சில தனியார் வாகனங்கள் மட்டும் இயங்கின.
Related Tags :
Next Story