சட்டீஸ்காரில் நக்சலைட்டுகளுடனான என்கவுன்ட்டரில் 4 எல்லை பாதுகாப்பு படையினர் பலி
சட்டீஸ்காரில் நக்சலைட்டுகளுடனான என்கவுன்ட்டரில் 4 எல்லை பாதுகாப்பு படையினர் இன்று கொல்லப்பட்டனர்.
ராய்ப்பூர்,
சட்டீஸ்காரின் கேங்கர் மாவட்டத்தில் குழுவாக சென்ற எல்லை பாதுகாப்பு படையினரை நோக்கி நக்சலைட்டுகள் இன்று துப்பாக்கி சூடு நடத்தினர். இதனை அடுத்து வீரர்களும் பதிலடி தாக்குதலில் ஈடுபட்டனர்.
இந்த கடுமையான துப்பாக்கி சண்டையில் 4 எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் கொல்லப்பட்டனர். வேறு 2 வீரர்கள் காயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். நக்சலைட்டுகள் ஆதிக்கம் அதிகமுள்ள சட்டீஸ்காரில் திடீரென 4 வீரர்கள் கொல்லப்பட்டு உள்ளது அந்த பகுதியில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story